எம்.எல்.ஏ அருள்
எம்.எல்.ஏ அருள்pt wab

பாமக எம்.எல்.ஏ அருள் மீது தாக்குதலா? கல், உருட்டு கட்டைகளோடு மாறி மாறி மோதல்! சேலத்தில் பரபரப்பு

பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் ஆதரவாளர்களை காரை வழிமறித்து அன்புமணி ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, எம்.எல்.ஏ அருள் தரப்பினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Published on
Summary

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் ஆதரவாளர்களை காரை வழிமறித்து அன்புமணி ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, எம்.எல்.ஏ அருள் தரப்பினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அன்புமணி தரப்பினைச் சார்ந்த திலகபாமா செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அதில், அருள் தாக்கப்பட்டு இருக்கிறாரா இல்லை தாக்கியதற்கு பதிலடி பெற்றுள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..

எம்.எல்.ஏ அருள்
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை | யார் அந்த 3 பேர்..? காவல் ஆணையரின் திடுக்கிடும் தகவல்!

பாமகவில் மோதல் போக்கில் ராமதாஸ் Vs அண்புமணி அணிகள்!

பாமக-வில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இரு தரப்பினர்களுக்கு கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், பாமகவில் பல்வேறு உட்கட்சிப் பிரச்சனைகள் நிலவி வருகின்றன. சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அருள் ராமதாஸிற்கு ஆதரவாக பல்வேறு கருத்து தெரிவித்து வந்ததால், அன்புமணி தரப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் அருள்
சட்டமன்ற உறுப்பினர் அருள்pt web

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடுகம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி இல்லத்தில் துக்க நிகழ்வுக்காக சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் மற்றும் தனது ஆதரவாளர்களோடு சென்றார். அப்போது, அருள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் காரை அன்புமணி தரப்பைச் சார்ந்த ஆதரவாளர்கள் வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பைச் சார்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கல் உருட்டு கட்டைகளோடு மாறி மாறி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அருகில் இருந்த போலீசார் இரு தரப்பையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

எம்.எல்.ஏ அருள்
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை | யார் அந்த 3 பேர்..? காவல் ஆணையரின் திடுக்கிடும் தகவல்!
எம்.எல்.ஏ அருள்
'+2 தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி..' 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

இந்த தாக்குதல் சம்பவத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் விஜி, சங்கர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, ஒரே கட்சியை சேர்ந்த இரு தரப்பினர் கல் மற்றும் உருட்டை கட்டைகளால் மாறி மாறி தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாமக எம்.எல்.ஏ அருள், அன்புமணி ராமதாஸ்
பாமக எம்.எல்.ஏ அருள், அன்புமணி ராமதாஸ்pt web

”என்னை கொலை செய்யும் நோக்கில், அன்புமணி ஆதரவாளர்கள்..” - எம்.எல்.ஏ அருள்!

இந்நிலையில், எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "என்னை கொலை செய்யும் நோக்கில், அன்புமணி ஆதரவாளர்கள், என் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்புமணியை பற்றி எனக்கு பல உண்மைகள் தெரியும். என்னை சீண்டிக் கொண்டே இருந்தால், அன்புமணியை பற்றி பல உண்மைகளை வெளியிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ அருள்
'டிஜிட்டல் அரெஸ்ட்’ மூலம் ரூ.3,000 கோடி திருட்டு..' - உச்ச நீதிமன்றம்

நடந்தது இதுதான் - திலகபாமா விளக்கம்!

இதையடுத்து, பா.ம.க அன்புமணி ஆதரவாளர் திலகபாமா அன்புமணியை விமர்சித்து பேட்டியளித்துள்ளார். அதில், நான் தாக்க பட்டேன் என்னை கொலை முயற்சி செய்துள்ளனர் என ஒப்பாரி வைத்து வருகிறார். அருள் தாக்கப்பட்டு இருக்கிறாரா இல்லை தாக்கியதற்கு பதிலடி பெற்றுள்ளாரா? என்ற கேள்வி எழுகிறது. நான் தாக்க பட்டேன் என்னை கொலை முயற்சி செய்துள்ளனர் என ஒப்பாரி வைத்து வருகிறார். தற்போது, பாமகவில் அதிகாரப்போட்டி நடைபெற்று வருகிறது. பல கோடி வன்னியர்கள் மற்றும் அனைத்து சமுதாயத்தினரும் உருவாக்கிய பாமக என்ற கட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எடுத்து இருக்கின்ற முயற்சியில் அருளுக்கு தன்னுடைய இடம் பறிபோகி விட்டது என்ற பயம். அந்த பயத்தில் தான் பேசும் பொருளாக இருக்க வேண்டும் என்று பல்வேறு விஷயங்களை அருள் செய்து கொண்டிருக்கிறார்.

எம்.எல்.ஏ அருள்
அதிரடி நீக்கம்.. உறுதியான முடிவு| ஜெ., பாணியை கையிலெடுக்கும் பழனிசாமி.. அதிமுகவுக்கு சாதகமா? பாதகமா?
பாமக திலகபாமா
பாமக திலகபாமாஎக்ஸ்

”வயலில் தாக்கிய சம்பவங்கள் தான் தற்போது வீடியோவில் வந்து கொண்டிருக்கிறது. துக்க வீட்டில் வைத்து ராஜேஷ் என்ற இளைஞரை அடித்துள்ளனர். ராஜேஷ் என்பவர் வீட்டில் தான் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். ஏற்கனவே ராஜேஷ் மீது பல்வேறு பொய் வழக்குகளை அருள் கொடுத்திருக்கிறார். தன்மீது பொய் வழக்கு பதிவு செய்தவர் தன்னிடத்தில் வாகனங்களை நிறுத்தினால் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ராஜேஷ் வாகனங்களை எடுக்க வேண்டும் என கூறியதற்கு அருள் உடன் வந்தவர்கள் ராஜேஷை தாக்கியுள்ளனர். அருள் பெரிய பட்டாளத்துடன் வருகின்றனர். ராஜேஷ் தாக்கப்பட்ட பின்பே பதில் தாக்குதலுக்கு தயாராகி உள்ளனர். தற்போது கருத்தியல் ரீதியாக அனைத்தையும் எதிர் கொள்ளும் தருணம் இது.

எம்.எல்.ஏ அருள்
”எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்” - திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் பேட்டி !

அருள் தான் முதலில் கை வைத்துள்ளார். அவர் கவனமாக இருக்க வேண்டும். அவரின் வார்த்தைகளும் செய்கைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். நேற்று உங்களுடன் இருந்த தொண்டனை தற்போது அடித்துள்ளீர்கள் என்றால் அவர் கட்சியை நோக்கி வரும்போது அதற்கு பாதுகாப்புக்காக கட்சி வருகிறது. இப்படிப்பட்ட சம்பவமாகவே நான் பார்க்கிறேன். அருள் வண்டியிலிருந்து எத்தனை உருட்டு கட்டைகள் கம்பிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சண்டைக்கு யார் தயாராக இருந்துள்ளனர்.

பாமக அருள் தாக்குதல் சம்பவம்
பாமக அருள் தாக்குதல் சம்பவம்pt web

தற்போது யார் யார் மேலே பழி போடுகின்றனர். எந்த இளைஞரும் வழக்கு வாங்க கூடாது என கூறுபவர் அன்புமணி. தற்போது அன்புமணி மீது கூசாமல் அருள் வார்த்தைகளை வீசுகின்ற விளைவு தற்போது இங்கு வந்து நிற்கிறது. தற்போது வரை எல்லா தொண்டர்களும் மேடையில் வாய் வழியாகவே பேசி வருகின்றனர்.

திமுகவுக்கு எதிரான அரசியலை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிரதமர் என்னை கொலை செய்ய அனுப்பினார் என்று கூட சொல்ல வாய்ப்புள்ளது. அன்புமணி தான் என்னை கொலை செய்ய அனுப்பினார் என்று அருள் கூறுகிறார். ஆனால் வீடியோ காட்சிகளில் அது போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை.பொய் சொல்லவாவது அருள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ அருள்
'+2 தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி..' 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com