'டிஜிட்டல் அரெஸ்ட்’ மூலம் ரூ.3,000 கோடி திருட்டு..' - உச்ச நீதிமன்றம்
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி வழக்கில் 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வயதான நபர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற மோசடிகளை தடுக்க கடுமையான உத்தரவுகள் அவசியம் என நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார். வழக்கு நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் `டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் பாதிக்கப்பட்டவர்கள், இதுவரை 3,000 கோடி ரூபாய் அளவுக்குபணத்தை இழந்துள்ளதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் 3,000 கோடிரூபாய் அளவுக்கு பணம்திருடப்பட்டுள்ளதாகவும், இதில்பெரும்பாலும் வயதான நபர்களே சிக்குவதாகவும் வேதனை தெரிவித்தார்.
இதுபோன்ற விவகாரங்கள் நம் நாட்டில்மட்டுமே நடைபெறுவதாகவும், "இதற்குஇரும்புகரம் கொண்டு கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்காவிட்டால்பெரும் பிரச்சனையாகிவிடும்" எனத்தெரிவித்தார். இந்த வழக்கு நவம்பர்10ஆம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

