ராமதாஸ் - அன்புமணி மோதல்
ராமதாஸ் - அன்புமணி மோதல்புதிய தலைமுறை

தனித்தனியாக ஆலோசனை.. தொடர் திட்டங்களைத் தீட்டும் ராமதாஸ் மற்றும் அன்புமணி

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.
Published on

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்துவேறுபாடு நிலவும் சூழலில், அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்த சூழலில், கட்சியை பலப்படுத்தும் நோக்கம் எனக்கூறி இதுவரை 46 மாவட்ட செயலாளர்கள், 25 மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பாமக-பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே வார்த்தை மோதல்
அன்புமணி - ராமதாஸ்.pngஎக்ஸ் தளம்

குறிப்பாக அக்கட்சியில் பலம் பொருந்திய பதவிகளில் இருந்த திலகபாமா, வழக்கறிஞர் பாலு, பூபால கண்ணன் உள்ளிட்டோரின் பதவி பறிப்பு பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தைலாபுரம் இல்லத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை நிறுவனர் ராமதாஸ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
HEADLINES : 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் கீழடி அறிக்கை விவகாரம் வரை..

பாமக உட்கட்சி பிரச்சினை நீடித்து வரும் சூழலில், மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டவுள்ளார். முதற்கட்டமாக 10 மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அவர் நடத்தவுள்ளார். வரும் 15 ஆம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், 16 ஆம் தேதி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 17 ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும், மாவட்ட பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 18 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் 19 ஆம் தேதி சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும், கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து, இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
அறிவியல்பூர்வ ஆதாரம் தேவை.. கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com