\
Periyar Knowledge Centre Worth ₹300 Crore Inaugurated By CM Vijay
முதல்வர் விஜய்Pt web

கோவை | பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்.. சிறப்பம்சங்கள் என்ன?

ரூ. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகியுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்துள்ளார்.
Published on: 

கோவை காந்திபுரத்தில், 7 ஏக்கர் நிலபரப்பில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'பெரியார் அறிவுலகம்' என்ற பெயரில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த, 2024 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன. இந்தச்சூழலில் தான், இன்றைய தினம், பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்ற அவர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காந்திபுரம் சென்றார். வழிநெடுகிலும் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, பெரியார் அறிவுலகம் முகப்பில் உள்ள பெரியார் சிலையை தொடர்ந்து வைத்தார். இதையடுத்து, நூலகம் மற்றும் அறிவியல் மையத்தையும் தொடங்கி வைத்து பார்வையிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்Pt web

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

1. 98 லட்சம் சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் கட்டடம்; புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற வடிவமைப்பு

2. தமிழ், ஆங்கிலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள். டிஜிட்டல் நூலக வசதியும் இடம்பெற்றுள்ளது.

3. விண்வெளி, கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் தொடர்பான அனுபவத்தைப் பெறும் வகையில் கோளரங்கம்

4. அறிவியல் உபகரணங்கள், கண்காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப அனுபவங்கள் மூலம் அறிவியல் கருத்துகளை அறிந்துகொள்ளும் வகையில் நவீன அறிவியல் மையம்

5. சிறுவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகையில் குழந்தைகள் நூலகம்

Periyar Knowledge Centre Worth ₹300 Crore Inaugurated By CM Vijay
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்.. 5 நாளாகியும் கிடைக்காத துப்பு!!

6. அரசு வேலைவாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூலகம்

7. கருத்தரங்குகள், கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்காக சுமார் 350 பேர் அமரக்கூடிய நவீன அரங்கம்

8. மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தனித்துவமான, நூலக வசதி

9. புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் மையங்கள்

10. மின்னணு நூல்கள், கணினி வழிக் கற்றல் மூலம் நவீனக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவீன டிஜிட்டல் வசதிகள்

போன்ற சிறப்பம்சங்களை பெரியார் அறிவுலகம் கொண்டுள்ளது.

Periyar Knowledge Centre Worth ₹300 Crore Inaugurated By CM Vijay
பெரியார் அறிவுலகம்.. திறந்து வைப்பதில் என்ன பெருமை? - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com