\
Stalin Says Periyar Arivulagam Was Built Under DMK Government
பெரியார் அறிவுலகம் திறப்புPt web

பெரியார் அறிவுலகம்.. திறந்து வைப்பதில் என்ன பெருமை? - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!!

முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கவுள்ள பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Published on: 

கோவை காந்திபுரத்தில், ஏழு ஏக்கர் நிலபரப்பில், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'பெரியார் அறிவுலகம்' என்ற பெயரில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கிய பணிகள், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன. இந்நிலையில் தான், பெரியார் அறிவுலகத்தை, முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் கோவை செல்லும் அவர், அங்கிருந்து காந்திபுரம் வரை சாலை மார்க்கமாக செல்லவுள்ளார். இதற்காக சாலையின் இரு புறங்களிலும் பேரிகார்டுகள் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது

விஜய்
விஜய் PTI

இந்தச்சூழலில் தான், பெரியார் அறிவுலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது எனவும் திறந்து வைப்பதில் என்ன பெருமை இருக்கிறது எனவும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”நம் ’திராவிட மாடல்’ அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது. யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!” எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் பணிகளில் திமுக ஈடுபட்டதாகவும், அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Stalin Says Periyar Arivulagam Was Built Under DMK Government
தமிழ்நாட்டில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை!! மழைப் பொழிவு எப்படி இருக்கும்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com