திருச்சி வேலுச்சாமி, ஆதவ் அர்ஜூனா, அருண்குமார்
திருச்சி வேலுச்சாமி, ஆதவ் அர்ஜூனா, அருண்குமார்Pt web

தவெக நிர்வாகிகளுடன் காங்கிரஸ் வேலுசாமி; பற்ற வைத்த பேச்சுகள்! மீண்டும் பேசுபொருளாகும் கூட்டணி கணக்கு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறித்துமஸ் விழாவில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
Published on

உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் 28-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று நடைபெற்றது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த விழாவில் முக்கிய அரசியல் தலைவர்களும், பிரபல நடிகர்களும் கலந்து கொள்வது வழக்கம் அந்த வகையில், இந்த வருடம் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியை சார்ந்த எம்.பி விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பட், ராஜேஷ் குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

திருச்சி வேலுச்சாமி
திருச்சி வேலுச்சாமிPt web

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் பலரும் இவ்விழாவை புறக்கணித்திருந்தனர். இதுகுறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், பல முக்கிய அலுவல்கள் காரணமாக இந்நிகழ்ச்சியை புறக்கணித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனாலும் இவ்விழாவில், காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுச்சாமி இவ்விழாவில் பங்கேற்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி வேலுச்சாமி, ஆதவ் அர்ஜூனா, அருண்குமார்
OPINION : திமுக தீய சக்தியா? யாருக்கு? - சூர்யா கிருஷ்ணமூர்த்தி

ஏற்கனவே, தவெக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கரூர் உயிரிழப்பு சம்பத்தின் போது கூட முதல் ஆளாக ராகுல்காந்தி தவெக தலைவர் விஜயை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியிருந்தார் என இந்தக் கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் தான், காங்கிரஸ் மாநிலத் தலைமை திமுகவுடன் மட்டுமே கூட்டணி, தவெகவுடன் கிடையாது என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறது. ஆனாலும், தவெக மற்றும் காங்கிரஸ் என இரு கட்சியின் நிர்வாகிகளும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அருமனை கிறிஸ்துமஸ் விழா அழைப்பிதழ்
அருமனை கிறிஸ்துமஸ் விழா அழைப்பிதழ்Pt web

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, “தமிழகத்தில் ஏற்படும் மாற்றத்திற்கு இந்த அருமனை கிறிஸ்துமஸ் விழா ஒரு திருப்புமுனையாக இருக்கிறது. நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும். புரிபவர்கள் புரிந்து கொள்ளுங்கள். பாவிகளை ரட்சிக்கவும், ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றவும் எண்ணம் கொண்டர்வர்கள் இணைந்துள்ளோம்” எனப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், திருச்சி வேலுச்சாமி இந்த விழாவில் தவெக காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசியிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

திருச்சி வேலுச்சாமி, ஆதவ் அர்ஜூனா, அருண்குமார்
OPINION | ”விஜய்க்கு காலம் சில வாய்ப்புகளைக் கொடுக்கிறது..” எல்லாம் தானாக அமைகிறதா?

தொடர்ந்து, கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய் சந்தித்து பேசியிருந்தது பேசிபொருளாகியிருந்தது. இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமி தவெக கலந்து கொண்ட விழாவில் கலந்து கொண்டிருப்பது. தவெக காங்கிரஸ் தொடர்பான விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

திருச்சி வேலுச்சாமி, ஆதவ் அர்ஜூனா, அருண்குமார்
2025 Rewind | திருப்பதி முதல் கரூர் வரை.. இந்தியாவில் நிகழ்ந்த 9 கூட்டநெரிசல் உயிரிழப்புகள்!

தவெக நிர்வாகிகளுடன் பேசியது குறித்து திருச்சி வேலுசாமியிடம் நமது செய்தியாளர் பாலாஜி பேசியதை இந்த வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com