இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுக MLA-வின் மகன் ஆடியோ வெளியிட்டு விளக்கம்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் தலைமறைவாகியுள்ளனர் என நேற்று செய்தி வெளியான நிலையில், எம்.எல்.ஏ-வின் மகன் ஆடியோ மூலம் இன்று விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுக MLA-வின் மகன் ஆடியோ வெளியிட்டு விளக்கம்!
இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுக MLA-வின் மகன் ஆடியோ வெளியிட்டு விளக்கம்!புதிய தலைமுறை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவர் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் 12-ம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேகாவை, பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டுள்ளனர்.

ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா

ரேகா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக உறுதியளித்ததாகத் தெரிகிறது. கடந்து ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட ரேகாவை, தனது குழந்தை அழும்போதெல்லாம், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினாவும் அடித்துத் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

ரேகாவை சிகரெட் கொண்டு ஆண்டோ மதிவாணன் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினரின் மருமகள், ரேகாவின் தலை முடியை வெட்டி அடித்துத் துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

தாக்கப்பட்ட இளம்பெண்
தாக்கப்பட்ட இளம்பெண்

பின்னர் இச்சம்பவம் தொடர்பாகச் சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார், திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மார்லினா இருவர் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுக MLA-வின் மகன் ஆடியோ வெளியிட்டு விளக்கம்!
வேலைக்கு வந்த பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: பல்லாவரம் MLA-வின் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாகப் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, "எனக்கும் என்னுடைய மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுக MLA-வின் மகன் ஆடியோ வெளியிட்டு விளக்கம்!
"எனக்கும் என் மகன் மீதான புகாருக்கும் எந்த சம்பந்தம் இல்லை" - பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ விளக்கம்!

இதற்கிடையில் சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், சிறுமிக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் குரல் கொடுத்து வந்தனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலுவாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மருமகள் மார்லினா, “எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது” எனக்கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுக MLA-வின் மகன் ஆடியோ வெளியிட்டு விளக்கம்!
“அபாண்டமான குற்றச்சாட்டு; இது எதனால நடக்குதுனே தெரியல”-திமுக MLAன் மருமகள் ஆடியோ வெளியிட்டு விளக்கம்

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், “இது தொடர்பாக விரிவான அறிக்கையை 2 நாட்களுக்குள் தர வேண்டும்” என காவல்துறை அதிகாரிகளுக்குத் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி
திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி

இதனையடுத்து, நேற்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டிற்கு நேரில் விசாரணை நடத்த காவல்துறையினர் சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அவர்கள் இருவரும் தலைமறைவானதாக கூறப்பட்டது. இது குறித்த விவரங்களை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்றும், உரிய பதில் அளிக்கவில்லை என்றால், கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினர் திட்டமிட்டு இருக்கின்றனர் என்றும் சொல்லப்பட்டது.

இளம்பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் : திமுக MLA-வின் மகன் ஆடியோ வெளியிட்டு விளக்கம்!
பிரதமரின் வருகையால் போக்குவரத்துக்கு துண்டிப்பு; ராமேஸ்வரத்தில் 1200 ராஜஸ்தான் பக்தர்கள் தவிப்பு!

இதற்கிடையே இவ்விவகாரத்தில், எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் இன்று ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், “நான், எனது மனைவி, எங்களின் சிறிய குழந்தை மட்டுமே வாழ்ந்து வந்த எங்களின் வீட்டில் வேலை செய்வதற்காக 16,000 ரூபாய் சம்பளத்தில் இந்தப் பெண்ணை நாங்கள் பணிக்காக நியமித்தோம். 

ஆனால் அவர் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் செல்போனை பயன்படுத்தி வந்ததால், நாங்கள் அவரிடம் ‘உனது அம்மா இரவு மட்டும்தான் உன்னிடம் மொபைல் கொடுக்கச் சொன்னார்கள். நீ ஏன் அதிகப்படியாக செல்போன் பயன்படுத்துகிறாய்?’ என்று கேட்டு அந்த போனை வாங்கி பார்த்தோம். அப்போதுதான் அவர் தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது.

ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா

அந்த நபர் யார் என கேட்ட போது, தனது காதலன் என தெரிவித்தார். மேலும் ‘நான் அந்தப் பையனை காதலிக்கவில்லை. அந்த பையன்தான் என்னை காதலிக்கிறான்’ என தெரிவித்தார். உடனடியாக என் மனைவியிடம் கூறி அப்பெண்ணின் அம்மாவுக்கு தகவல் தெரியப்படுத்துமாறு கூறினேன்.

அதேபோல் அப்பெண்ணின் அம்மாவிற்கு தெரியப்படுத்தி அவர்களை நேரில் வரவழைத்து பேசினோம். அப்போதுதான் ஏற்கெனவே அந்த பெண்ணிற்கும் அவருடைய மாமா மகனுக்கும் காதல் இருந்தது எனவும், அதனால் ஏற்பட்ட சிக்கலின் காரணமாகவே சொந்த ஊரிலிருந்து சென்னையில் அப்பெண்ணை பணிபுரிய அந்த அம்மா அனுப்பிவைத்ததும் எங்களுக்கு தெரியவந்தது.

அப்பெண்ணை பள்ளிக்கு அழைத்துச் சென்றதில் தொடங்கி, சான்றிதழ் வாங்கி கொடுத்தது வரைக்கும் நாங்கள் நேரடியாக ஈடுபட்டோம். அது மட்டுமின்றி அவரை வீட்டில் இருந்தவாறு படிக்கவும் வகுப்பில் சேர்த்துள்ளோம். அவர்கள் தாயின் அறிவுறுத்தலின்படியே சம்பளத்தை அவள் கையில் கொடுக்காமல் மொத்தமாக அவர் தாயின் கையில் கொடுப்பதற்காக வைத்துள்ளோம்.

டிசம்பர் 25 ம் தேதி அந்த பெண்ணுக்கு பிறந்த நாள் என்று கூறியவுடன் அந்த பெண்ணுக்கு புதுத்துணிகள், நகை வாங்கிகொடுத்து குடும்பத்தோடு கேக் வாங்கி வெட்டி சந்தோஷமாக கொண்டாடினோம். அப்படி நாங்கள் பார்த்துக்கொண்டோம்.

ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா

பிறந்தநாள் அன்று காதலனை பார்க்க வேண்டும் என அப்பெண் ஆசைப்பட்டதால் பீச்சுக்கு அழைத்துச் சென்று 20 நிமிடத்திற்கு மேல் எனது மனைவியும் கூட இருந்து பேசி வந்துள்ளார். இதற்கு மேல் நாங்கள் எப்படி பார்த்துக் கொள்ள முடியும்?

எனது தந்தை எப்பொழுதுமே இந்த வீட்டிற்கு வந்ததில்லை. அவரின் அரசியல் வாழ்க்கைக்கும் என்னுடைய தொழில் வாழ்க்கைக்கும் அது சரியானதாக இல்லை என்பதால், நாங்கள் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்போதாவது வந்து செல்வார். வெளியே பார்த்தாலும் பேசிக் கொள்வோம்” என்றுள்ளார். சுமார் 27 நிமிடங்களுக்கு இந்த ஆடியோ நீள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com