\
அண்ணாமலை - பெ.சண்முகம்
அண்ணாமலை - பெ.சண்முகம்web

'ஆர்எஸ்எஸ்ஸின் 2,501ஆவது அமைப்பை அண்ணாமலை தொடங்கியுள்ளார்' - பெ.சண்முகம்

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், அதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
Published on
Summary

பாஜகவிலிருந்து விலகி ‘இது நம்ம இயக்கம்’ என்ற புதிய கட்சியை தொடங்கிய அண்ணாமலை, தமிழகத்தில் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இதை ஆர்.எஸ்.எஸ். சார்ந்த 2,501ஆவது அமைப்பாக மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் விமர்சிக்கிறார். பெயர் மாற்றி வியாபாரம் வெற்றியடையாது; மோடி-அமித் ஷா ஆசீர்வாதத்துடன் நடக்கும் முயற்சி என குற்றம் சாட்டுகிறார்.

நீண்டகாலம் பாஜகவில் இருந்த அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி, தற்போது தனி இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து வீடியோவில் பேசிய அண்ணாமலை, ‘புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு, பார்வையோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அறிவித்த அண்ணாமலை, ’இது நம்ம இயக்கம்’ (we the leaders) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் ஆரம்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர்.

அண்ணாமலை
அண்ணாமலைPt web

இந்நிலையில் தான் பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி ஆரமித்திருக்கும் அண்ணாமலையை, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை - பெ.சண்முகம்
INDIA கூட்டணியில் இருந்து விலகல்.. திமுக முடிவுக்கு காரணம் என்ன? பாஜக எதிர்ப்பு என்னவாகும்?
பெ. சண்முகம்
பெ. சண்முகம்Pt web

பாஜகவிலிருந்து விலகியுள்ள அண்ணாமலை, மாரீச மான் வேடமிடுவதாக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் ஏற்கெனவே 2 ஆயிரத்து 500 அமைப்புகளை நடத்துவதாகவும், அண்ணாமலை தொடங்குவது 2 ஆயிரத்து 501ஆவது அமைப்பு எனவும் கூறினார். பாஜக தமிழக மக்களிடம் எடுபடவில்லை என்பதால், பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என, மோடி - அமித் ஷா ஆசியுடன் அண்ணாமலைமுயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். ஆரம்பித்த 2 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் பேர் சேர்ந்திருப்பது, பாஜகவினர் அண்ணாமலையின் அமைப்பில் இணைக்கப்படுகிறார்கள் என்பதையே தெரிவிப்பதாகவும், சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை - பெ.சண்முகம்
முதல் நாளே அண்ணாமலைக்கு ஷாக்? களமிறங்கிய லதா ரஜினிகாந்த்.. ஒரேநாளில் உருவெடுத்த இயக்கங்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com