அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதிPt web

”திமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே., காங்கிரஸ் சட்டப்பேரவைக்கு வரும்” - அமைச்சர் ரகுபதி

திமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் அரசியலில் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸுக்கு நன்றாக தெரியும் என இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Published on

சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில்தான் ஆளும் திமுக கூட்டணியில் நடைபெற்றுவரும் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆட்சியில் பங்கு என்ற குரலைத் தொடர்ந்து எழுப்பி வரும் காங்கிரஸ், சட்டப்பேரவைத் தேர்தலிலுக்கு 39 தொகுதிகளும் 2 மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என திமுகவை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவ்வளவு தொகுதிகள் கொடுக்கமுடியாது என திமுக மறுத்திருக்கும் நிலையில், 25 +1 என்ற தொகுதிகளை கொடுக்க முன்வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

திமுக மற்றும் காங்கிரஸார்
திமுக மற்றும் காங்கிரஸார்Pt web

இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் என வலியுறுத்தி வருவதாகவும், நேற்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், தவெகவுடன் கூட்டணி வைப்பதால் வரும் சாதக பாதகங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் தான், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை திமுக - காங்கிரஸ் இடையேயான சுமூகமாக இருக்கிறது என தெரிவித்திருந்தார். இதற்கிடையில், திமுக 30+2 இடங்களை தொகுதிகளை காங்கிரஸுக்கு தர முன்வந்திருப்பதாகவும், காங்கிரஸ் 36 + 2 என்ற எண்ணிக்கைக்கு குறைவாக வாங்க முடியாது எனக் கூறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் ரகுபதி
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி? ஸ்டாலினைச் சந்தித்த செல்வப்பெருந்தகை.. நடந்தது என்ன?

இந்த சூழலில் தான் நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த இயற்கை வளங்கள் துறை ரகுபதியிடம் காங்கிரஸ் - திமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பட்டது. அப்போது பேசிய அவர், ”திமுகவைப் பொறுத்த வரைக்கும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தங்களுடைய தலைவர் சரியான பாதையில் தான் கூட்டணியை கொண்டு செல்வார். காங்கிரஸ் - தவெக இடையே திரை மறைவில் பேச்சு வார்த்தை என்பது பொய்யாக கிளப்பி விடும் பிரச்சனை. திமுக கூட்டணியில் இருந்தால் தான் அரசியலில் காங்கிரஸுக்கு அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதிPt web

அதேசமயம், திமுக கூட்டணியில் இருப்பதன் மூலமே, காங்கிரஸால் சட்டமன்றத்துக்குள் வர முடியும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சு வார்த்தை தொடங்கவில்லை. அதேசமயம், அந்தக் கூட்டணியில் மேஜர் யார்.? மைனர் யார்.? என்ற முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் அக்கூட்டணியை எங்களுடன் ஒப்பிட முடியாது எனவும் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர் ரகுபதி
தேமுதிக | ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய திமுக.. எல்.கே. சுதீஷ்-க்கு வாய்ப்பு?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com