தேமுதிக | ஒரு மாநிலங்களவை இடத்தை ஒதுக்கிய திமுக.. எல்.கே. சுதீஷ்-க்கு வாய்ப்பு?
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில்தான் ஆளும் திமுக கூட்டணியில் நடைபெற்றுவரும் தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மார்ச் 16-ம் தேதி நடக்கவிருக்கும் மாநிலங்களைத் தேர்தல் தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டியே வருவதால், அத்தேர்தல் தொகுதிப் பங்கீட்டில் முக்கியப்பங்கு வகித்தது.
முன்னதாக, தமிழ்நாட்டில் 6 மாநிலங்களைவை இடங்கள் காலியாகவிருக்கும் நிலையில், 4 இடங்கள் திமுக வசம் இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் புதிதாக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக ஆகிய கட்சிகள் சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என திமுக வலியுறுத்தி வந்தன. காங்கிரஸ் இடையேயான கூட்டணி இன்னும் இறுதியாக நிலையில், தேமுதிகவுக்கு இன்று 1 மாநிலங்களைவை இடத்தை திமுக ஒதுக்கியிருக்கிறது.
அதேசமயம், அந்தக் கட்சிக்கு இன்னும் சட்டசபை இடங்களை ஒதுக்கவில்லை. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுதிக ஒதுக்கப்பட்டிருக்கும் 1 மாநிலங்களவை இடத்துக்கு அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதேபோல, திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வது குறித்தான நிலைபாட்டைப் பொறுத்து மற்ற இடங்களுக்கான மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவிப்பது அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது போன்ற முடிவுகளை திமுக எடுக்க வாய்ப்புள்ளது.

