கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் புதியதிட்டங்கள் என்னென்ன?

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
புதிய திட்டங்கள்
புதிய திட்டங்கள்புதிய தலைமுறை

செய்தியாளர்: ஆனந்தன்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பை ஒட்டி, சுத்தம் செய்யும் பணிகள், புத்தகங்கள் விநியோகிக்க தேவையான முன்னேற்பாடுகள் என பல்வேறு பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்றன.

பள்ளிகள் தொடங்கிய முதல் வாரத்திற்குள் புத்தகங்களை வழங்க அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் 210 நாள்கள் பள்ளிகள் செயல்பட்ட நிலையில், கூடுதலாக 10 நாள்கள் நடப்புக் கல்வியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த நாள்காட்டியையும் பள்ளிக்கல்வித்துறை வெளிட்டுள்ளது.

அதன்படி, "நடப்பாண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படும். மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழகத்தை அதிகரிக்க 20 நிமிடங்கள் நூல் வாசிப்புக்கு ஒதுக்கப்பட உள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் ஒரு மணி முதல் 1.20 மணி வரை நூல் வாசிப்பு நடத்தப்பட உள்ளது. அதேபோல், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 5 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 பாடவேளைகள் வாசிப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், விநாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலையும் கைவண்ணமும், இசை, வாய்ப்பாட்டு உள்ளிட்ட தனித்திறன்களை வளர்க்க பாட வேளைகள் ஒதுக்கப்பட உள்ளன.

பள்ளி புத்தகங்கள்
பள்ளி புத்தகங்கள்

அதேபோல், உயர்கல்வி வழிகாட்டி பாடவேளைகளும் நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளைப் பொறுத்தவரையில், காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு விடுமுறை அக்டோபர் 2 ஆம் தேதிவரை வழங்கப்பட உள்ளது. அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுப்பு வழங்கப்படுகிறது.

புதிய திட்டங்கள்
சிவகங்கை: அடகு கடை சுவரை துளையிட்டு தங்க நகை, பணம் கொள்ளை - காவல்துறை விசாரணை

ஜனவரி மாதத்தில் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும், ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் இறுதித் தேர்வு நடத்தப்படும். அதேநேரத்தில் இந்த விடுமுறைகள் தவிர்த்து, பொங்கல் விடுமுறை சனி, ஞாயிறு உடன் தொடர்ந்து 6 நாள்கள் விடப்படும். அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு மறுநாளுடன் சேர்த்து சனி, ஞாயிறு உட்பட 4 நாள்கள் விடுமுறை விடப்படலாம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி மட்டுமின்றி தனித்திறனுக்கும் சேர்த்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ள சூழலில் நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய திட்டங்கள்
திருப்பத்தூர்: ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com