திருப்பத்தூர்: ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 80 சவரன் தங்க நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

வாணியம்பாடி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 80 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை; சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை.
Theft, police investigation
Theft, police investigationpt desk

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி (55). இவர், ஆலங்காயம் அடுத்த காவலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி தன் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக குடும்பத்துடன் நாமக்கல் சென்ற இவர், பின்னர் அங்கிருந்து குடும்பத்துடன் கன்னியாகுமாரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளார்.

police investigation
police investigationpt desk

அப்போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பத்மாவதி, அறையின் உள்ளே சென்று பார்த்துள்ளார். பீரோவில் வைத்திருந்த 80 சவரன் தங்க நகைகள், 4 லட்சத்து 73 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பத்மாவதி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Theft, police investigation
சிவகங்கை: அடகு கடை சுவரை துளையிட்டு தங்க நகை, பணம் கொள்ளை - காவல்துறை விசாரணை

புகாரின் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் இக்கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் இக்கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் ஆலங்காயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com