சிவகங்கை: அடகு கடை சுவரை துளையிட்டு தங்க நகை, பணம் கொள்ளை - காவல்துறை விசாரணை

மதகுபட்டியில் நகை அடகு கடை மற்றும் நிதி நிறுவன சுவரை துளையிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Jewel Theft
Jewel Theftpt desk

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி தச்சம்புதுப்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் ஏழுமலையான் என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு கடைக்குள் புகுந்து லாக்கரை உடைத்து, அதிலிருந்த சுமார் 150 சவரன் நகை, மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அடகு கடை
அடகு கடைpt desk

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆட்கள் நடமாட்டும் அதிகமாக இல்லாத நிலையில், அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அடகு கடை உரிமையாளர் பாண்டிதுரை கொடுத்த புகாரின் பேரில், மதகுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களின் உதவியுடன், கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Jewel Theft
சென்னை: கஞ்சா விற்பனை செய்ததாக அரசியல் பிரமுகரின் மனைவி உட்பட 6 பேர் கைது - காவல்துறை நடவடிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com