NDA Alliance Set to Expand in Tamil Nadu, Says EPS
கே. பழனிசாமிPt web

இப்தார் நிகழ்ச்சி | ”அடிப்படை கொள்கையிலிருந்து அதிமுக விலகாது” - கே. பழனிசாமி விளக்கம்.!

என்.டி.ஏ கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவதற்கு வாய்ப்புள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Published on

சென்னை எழும்பூரில் அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுசெயலாளர் கே. பழனிசாமி, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கே. பழனிசாமி
கே. பழனிசாமிPt web

நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் கே. பழனிசாமி பேசும்போது, நோன்பு என்பது இதயத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி என்றும், இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டை உருவாக்கும் ஒன்றாகும். அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அரசியல் இயக்கமாக மட்டும் அல்லாமல் மக்களை நல்வழிப்படுத்தும் இயக்கமாக அதிமுகவை நடத்தி வந்தனர். அதேபோலவே, தற்போது அதிமுக செயல்பட்டு வருவகிறது. அதிமுக ஆட்சி காலம் சிறுபான்மை மக்களுக்கு பொற்காலமாக இருந்தது என வரலாறு சொல்லும் என்று தெரிவித்தார்.

NDA Alliance Set to Expand in Tamil Nadu, Says EPS
தேர்தல் தேதி அறிவிப்பு.. அமலானது தேர்தல் நடத்தை விதிமுறைகள்.. அகற்றப்படும் முதல்வர் படம்.!

தொடர்ந்து பேசிய அவர், எந்த சூழலிலும் அதிமுக தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகாது. அதிமுக வாக்குகளுக்காக மட்டும் அரசியல் செய்யும் இயக்கம் அல்ல, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் இயக்கம். சிறுபான்மை மக்களை தாங்கள்தான் காப்பாற்றுவதாக திமுக காட்டிக்கொள்கிறது. ஆனால், உண்மையில், சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் காக்கும் இயக்கம் அதிமுக என்றும், மக்களுக்கு தேவையானதை வழங்குவதுதான் அதிமுகவின் நோக்கம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, விஜய்
எடப்பாடி பழனிசாமி, விஜய்Pt web

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைவதற்கு வாய்ப்புள்ளதா? என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜயுடன் அதிமுக எவ்வித கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் தெரிவித்தார். அதேசமயம், என்.டி.ஏ கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.

NDA Alliance Set to Expand in Tamil Nadu, Says EPS
’தமிழ்நாடு to அசாம்..’ தேர்தல் தேதி அறிவிப்பு.. எப்படி இருக்கிறது 5 மாநில அரசியல் களம்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com