சாலையில் சேதமா? ஃபோட்டோவோட இந்த செயலியில் பதிவேற்றுங்க... உடனே ஆக்‌ஷன் எடுக்கப்படும்!

சென்னையில் அமைந்துள்ள கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘ நம்ம சாலை செயலி’ என்ற மென்பொருள் செயலியை துவங்கி வைத்தார்.
நம்ம சாலை செயலி அறிமுகம்
நம்ம சாலை செயலி அறிமுகம்ட்விட்டர்

பள்ளங்களற்ற சாலையை உருவாக்கும் விதமாக சென்னை கிண்டியில் அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘நம்ம சாலை செயலி’ என்ற மென்பொருள் செயலியை நேற்று துவங்கி வைத்தார்.

ஒரு இடத்தில் இருந்து மற்றொர் இடத்திற்கு நம்மை அழைத்து செல்வதற்கு வாகனங்கள் முக்கியத்துவத்தையும் முதல் இடத்தையும் பெறுவதாக அமைகிறது.

ஆனால் அந்த வாகனங்கள் சரியாக செல்ல வேண்டும் என்றால், அதற்கு அவை பயணிக்கும் சாலைகளும் சரியாக இருக்க வேண்டும் அல்லவா?

தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான சாலைகளில் சாலைகளை காட்டிலும் பள்ளங்கள் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. மழைநீர் வடிகால் அமைப்பை நடைமுறைப்படுத்த தோண்டப்படும் குழிகள் உட்பட பல காரணங்களுக்காக தோண்டி வைக்கப்படும் சாலைகள் பயன்பாட்டிற்கு பிறகும்கூட அப்படியே இருக்கிறது.

இதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2023-2024 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது இதற்கென்று பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ’நம்ம சாலை செயலி’ என்ற தனித்துவமான மென்பொருள் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் துவக்கமானது நேற்று சென்னையில் அமைந்துள்ள கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.

நம்ம சாலை செயலி
நம்ம சாலை செயலி

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ‘நம்ம சாலை செயலியை’ என்ற மென்பொருள் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

நம்ம சாலை செயலி:

பொதுமக்கள் பராமரிப்பு இல்லாத, பயணிக்க ஏதுவாக இல்லாத பள்ளம் நிறைந்த சாலைகளை கண்டவுடன் ‘நம்ம சாலை செயலி’ மென்பொருளின் உதவியுடன் அச்சாலையை புகைப்படம் எடுத்து அதில் பதில் பதிவேற்ற வேண்டும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அப்புகைப்படம் அப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிக்கு மின் அஞ்சல் வாயிலாக அனுப்படும். பிறகு சாலை பொரியாளர் அதனை கள ஆய்வு செயய்வார். பின்னர் அச்சாலையை சரி செய்து அதற்குரிய புகைப்படங்களை அதே செயலியில் சம்பந்தபட்ட அதிகாரிகள் பதிவேற்றம் செய்வர்.

இந்த புகார் குறித்த விவரம், அது சரி செய்யப்பட்ட புகைப்படம் என்று அனைத்து தரவுகளும் புகார் அளித்த நபரின் ஃபோனுக்கு அனுப்படும்.

நம்ம சாலை செயலி அறிமுகம்
“நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது” - சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆர்.பி உதயகுமார் கண்டனம்

இத்திட்டம் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்ட வீடியோவில் ,

”கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவு உற்பத்தியில் 5 முறை மத்திய அரசின் கிருஷி கர்மான் விருதைப் பெற்று இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருந்தது.

பால் உற்பத்தி, சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் இன்று மத்திய சாலை போக்குவரத்து துறையின் ஆய்வறிக்கையில் சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் பெற்று இருக்கின்றது, என்கின்ற வேதனையான ஆய்வறிக்கையின் புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

ஆர்.பி உதயகுமார்
ஆர்.பி உதயகுமார்

அதேபோல சாலை விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்பிலும் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

நம்ம சாலை செயலி அறிமுகம்
தமிழ்நாடு: பதிவு செய்யப்படாத 22,000 சாலை விபத்து மரணங்கள்... விருதுக்காக நடந்த மோசடியா?

இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் நம்ம சாலை என்ற செயலியை அறிவிக்கப்படாத முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வைத்து துவங்கி வைத்தார். ஆனால் சாலைகளை மேம்படுத்த முறையான பராமரிப்புகள் நடத்தவில்லை என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றது.

இந்த ஆய்வு அறிக்கை அதிர்ச்சி அளிக்க கூடியதாகவும் போர்க்கால அடிப்படையில் உடனடி தீர்வு காண வேண்டியதாகவும் உள்ளது. எனவே நம்ம சாலை செயலி மக்களுக்கு முழுமையாக பயன்படுமா? அல்லது விளம்பரத்திற்காக செய்யப்படுகிறதா? என்பதை கவனத்தில் கொண்டு சாலை விபத்துகளை தடுப்பதற்கு ஸ்டாலின் செயல்பட வேண்டும்“ என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com