தமிழ்நாடு: பதிவு செய்யப்படாத 22,000 சாலை விபத்து மரணங்கள்... விருதுக்காக நடந்த மோசடியா?

தமிழ்நாடு: பதிவு செய்யப்படாத 22,000 சாலை விபத்து மரணங்கள்... விருதுக்காக நடந்த மோசடியா?
தமிழ்நாடு: பதிவு செய்யப்படாத 22,000 சாலை விபத்து மரணங்கள்... விருதுக்காக நடந்த மோசடியா?

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 22 ஆயிரம் சாலை விபத்து மரணங்களை பதிவு செய்யப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சாலை விபத்தில் கூடுதலாக 22,018 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. விபத்துகளை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இந்த தகவலை கண்டறிந்துள்ளனர். சாலை விபத்துக்களைக் குறைத்ததற்காக இரண்டு தேசிய அளவிலான விருதுகள் மற்றும் உலக வங்கியின் பாராட்டுகளைப் தமிழகம் பெற்றுள்ள நிலையில், இந்த புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

விருது பெறுவதர்காக இறப்புகள் குறைத்து காண்பிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் கொரோனா தொற்றை எதிர்கொண்ட போது பல விபத்துகளில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் மட்டுமே கணக்கெடுக்கப்பட்டதாகவும், மருத்துவமனைகளில் சில நாட்களுக்கு பிறகு இறந்தவர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் முதல் கட்டமாக தெரியவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com