\
Nainar Nagendran Praises Sarathkumar as CM Material
நயினார் நாகேந்திரன் - சீமான்Pt web

”முதல்வராக அனைத்து தகுதியும் சரத்குமாருக்கு உள்ளது" – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

நடிகரும் பாஜக நிர்வாகியுமான நயினார் நாகேந்திரனின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. இந்தவிழாவில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் சீதப்பநல்லூரில், நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சரத்குமாருடன், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சரத்குமாரின் ரசிகர்கள் மற்றும் பாஜகவை சேர்ந்த கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

சரத்குமார் பிறந்தநாள் விழா
சரத்குமார் பிறந்தநாள் விழாPt web

அதனைத் தொடர்ந்து, பிறந்தநாள் மேடையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “எதிர்பார்ப்புடன் இருக்கும் ஒரு கூட்டம் இருக்கும்போது, 40 ஆண்டுகளும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த கூட்டத்திற்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர் கேட்ட உடன் கையில் இருக்கும் 7 லட்சம் ரூபாய் வாட்ச் கழட்டி கொடுக்கிறார் சரத்குமார். 

சிலர் எடுத்த எடுப்பில் முதலமைச்சராகி விடுகிறார்கள். இப்போது கலிகாலம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், முதலமைச்சராக அனைத்து தகுதியும் சரத்குமாருக்கு உள்ளது.

Nainar Nagendran Praises Sarathkumar as CM Material
புதிய இடத்துக்கு மாறும் முதல்வர் விஜய் அலுவலகம்.. காரணம் என்ன?

இங்கு யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்காமல் விட்டுவிடுவார்கள். ஒரு நயா பைசா இல்லாமல் தேசிய கட்சியில் சரத்குமார் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். நிச்சயமாக தேசிய அளவிலான பதவிகள் அவரை தேடி வரும். லட்சக்கணக்கான மக்களை கொள்ளை கொண்டவர். ஒரு சமுதாயத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் ரசிகர் என்று கூறினால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சீமான்
சீமான்Pt web

தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், ”ஒரு கட்சியைச் சார்ந்து ஒருவர் இருந்தால் அவர் உறவினராக இருந்தாலும் பேசக்கூடாது. இப்படிப்பட்ட ஒரு மனப்போக்கு இருக்கிறது. எங்களுடைய அரசியல் நிலைப்பாடு கொள்கை கோட்பாடு வேறாக இருக்கலாம்; நாங்கள் ஒரு தாய் பிள்ளை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை. சரத்குமாரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய உடலை பேணி பாதுகாத்துக் கொண்டிருப்பதால் எந்த கதாபாத்திரத்திலும் நடக்கும் வல்லமை படைத்துள்ளார். இந்தியாவிலே மிகவும் பிசியான மனிதர் 42 படங்கள் நடிக்கும் ஒரே நபர் இவர்தான். எல்லா மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

Nainar Nagendran Praises Sarathkumar as CM Material
மத்திய அரசில் மாற்றம்.. கல்வித் துறை ஒதுக்கீடு.. யாருக்கு தெரியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com