\
Pralhad Joshi Assigned Additional Education Ministry Portfolio
பிரகலாத் ஜோஷிPt web

மத்திய அரசில் மாற்றம்.. கல்வித் துறை ஒதுக்கீடு.. யாருக்கு தெரியுமா?

இளைஞர்களின் போராட்டத்தால் மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருக்கும் நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
Published on

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈட்பட்டு வந்த நிலையில், இன்று தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். தொடர்ந்து, பிரதமர் மோடியின் பரிந்துரையின் அடிப்படையில், அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிரகலாத் ஜோஷி,
பிரகலாத் ஜோஷி,Pt web

இதையடுத்து, கல்வி அமைச்சர் பதவியை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து பாஜகவில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்தசூழலில் தான், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராக இருந்த பிரகலாத் ஜோஷி-க்கு கல்வித்துறையை கூடுதலாக ஒதுக்கி தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Pralhad Joshi Assigned Additional Education Ministry Portfolio
மத்திய அரசுடன் உடன்பாடு.. போராட்டத்தை வாபஸ் பெற்றது CJP!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com