அதிமுக, பாஜக-வை பின்னுக்குத் தள்ளி 6 தொகுதிகளில் 3வது இடத்தை தக்கவைத்த நாம் தமிழர் கட்சி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அதிமுக, பாஜக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3வது இடத்தை தக்கவைத்துள்ளனர்.
3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்puthiya thalaimurai web

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

மக்களவை தேர்தல் 2024
மக்களவை தேர்தல் 2024முகநூல்

இந்நிலையில், பாஜக வேட்பாளர்கள் யாரும் எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை. கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன், தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

என்றாலும், இந்தத் தேர்தலின் வாக்கு சதவிகிதத்தைப் பார்க்கும்போது தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
கடைசி நொடி வரை திக்.. திக்! தருமபுரியில் திமுக த்ரில் வெற்றி.. நூலிழையில் தவறவிட்ட சௌமியா அன்புமணி!
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது, தமிழகத்தில் 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.

அதன்படி புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி ஆகிய 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் அதிமுக, பாஜக வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி சீமானின் நாம் தமிழர் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அதன் விவரத்தை, காணலாம்...

புதுச்சேரி மக்களவை தொகுதி

நாதக மேனகா
நாதக மேனகா
 • காங்கிரஸ் (திமுக கூட்டணி) வைத்தியலிங்கம் - 4,26,005 வாக்குகள்

 • பாஜக நமச்சிவாயம் - 2,89,489 வாக்குகள்

 • நாதக மேனகா - 39,603 வாக்குகள்

 • அதிமுக தமிழ்வேந்தன் - 25,165 வாக்குகள்

பெற்றுள்ளனர். இதன்மூலம், நாதக வேட்பாளர் ஆர்.மேனகா, அதிமுக-வை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி

நாதக ஜெகதீசன்
நாதக ஜெகதீசன்
 • திமுக மயிலரசன் - 5,61,589 வாக்குகள்

 • அதிமுக குமரகுரு - 5,07,805 வாக்குகள்

 • நாதக ஜெகதீசன் - 73,652 வாக்குகள்

 • பாமக (பாஜக கூட்டணி) தேவதாஸ் ராமசாமி - 71,290 வாக்குகள்

பெற்றுள்ளனர். இதன்மூலம் நாதக வேட்பாளர் ஏ.ஜெகதீசன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தேவதாஸ் ராமசாமியை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி

நாதக மரிய ஜெனிஃபர்
நாதக மரிய ஜெனிஃபர்
 • காங்கிரஸ் (திமுக கூட்டணி) விஜய் வசந்த் - 5,46,248 வாக்குகள்

 • பாஜக பொன் ராதாகிருஷ்ணன் - 3,66,341 வாக்குகள்

 • நாதக மரிய ஜெனிஃபர் க்ளாரா மைக்கேல் - 52,721 வாக்குகள்

 • அதிமுக பசிலயன் நசரத் - 41,393 வாக்குகள்

பெற்றுள்ளனர். இதன்மூலம் நாதக சார்பில் போட்டியிட்ட மரியா ஜெனிஃபர் அதிமுக சார்பில் போட்டியிட்ட பசிலியன் நசரத்தைப் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதி

நாதக கார்மேகம்
நாதக கார்மேகம்
 • திமுக பிரகாஷ் - 5,62,339 வாக்குகள்

 • அதிமுக அசோக் குமார் - 3,25,773 வாக்குகள்

 • நாதக கார்மேகம் - 82,796 வாக்குகள்

 • தமிழ் மாநில காங்கிரஸ் (பாஜக கூட்டணி) விஜயகுமார் - 77,911 வாக்குகள்

பெற்றுள்ளனர். இதன்மூலம் நாதக வேட்பாளர் கார்மேகம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயகுமாரை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைத் தக்கவைத்துள்ளர்.

3ம் இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
ஆட்சி அமைக்க தயார் நிலையில் பாஜக! நிதிஷ், சந்திரபாபுவை இழுக்க காங்கிரஸ் போடும் கணக்கு! என்ன ஆகும்?

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி

நாதக கார்த்திகா
நாதக கார்த்திகா
 • கம்யூனிஸ்ட் (திமுக கூட்டணி) செல்வராஜ் - 4,65,044 வாக்குகள்

 • அதிமுக ஸ்ருஷித் சங்கர் - 2,56,087 வாக்குகள்

 • நாதக கார்த்திகா - 1,31,294 வாக்குகள்

 • பாஜக ரமேஷ் கோவிந்த் - 1,02,173 வாக்குகள்

பெற்றுள்ளனர். இதன்மூலம் நாதக சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்தை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

திருச்சி மக்களவைத் தொகுதி

நாதக ராஜேஷ்
நாதக ராஜேஷ்
 • மதிமுக (திமுக கூட்டணி) துரை வைகோ - 5,42,213 வாக்குகள்

 • அதிமுக கருப்பையா - 2,29,119 வாக்குகள்

 • நாதக ராஜேஷ் - 1,07,458 வாக்குகள்

 • அமமுக செந்தில்நாதன் (பாஜக கூட்டணி) - 1,00,747 வாக்குகள்

பெற்றுள்ளனர். இதன்மூலம் நாதக சார்பில் போட்டியிட்ட ராஜேஷ், பாஜக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com