கடைசி நொடி வரை திக்.. திக்! தருமபுரியில் திமுக த்ரில் வெற்றி.. நூலிழையில் தவறவிட்ட சௌமியா அன்புமணி!

தருமபுரி மக்களவை தொகுதியில் இறுதிவரை திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.
சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணிpt web

7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. அதன்படி தமிழ்நாட்டில் 39 தொகுகளில், பாஜாக கூட்டணியில் இடம்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களில் போட்டியிட்டது. இதில் அன்புமணி ராமதாஸின் மனைவியான சௌமியா ராமதாஸ்ம் தருமபுரியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, திமுகவைச் சேர்ந்த ஆ.மணி, அதிமுகவைச் சேர்ந்த அசோகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அபிநயா ஆகியோர் அப்பகுதியில் களமிறங்கினர்.

தர்மபுரி வெற்றி வாய்ப்பு
தர்மபுரி வெற்றி வாய்ப்புPT

ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்த முதலே சௌமியா ராமதாஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். பிறகு இவருக்கு எதிராக களம் போட்டியிட்ட திமுகவின் ஆ.மணி முன்னிலை வகித்து வந்தார். ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளருக்கும் இவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. சௌமியா ராமதாஸ் வெற்றிக்கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், திமுகவைச் சேர்ந்த மணி, 20,396 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், சௌமியா அன்புமணி பெற்ற வாக்குகள் 4,08,173, வெற்றி வாகை சூடிய திமுகவைச் சேர்ந்த ஆ.மணி பெற்ற வாக்குகள்4,28,569. அதிமுகவைச் சேர்ந்த அசோகன் பெற்ற வாக்குகள் 2,91,177 நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த அபிநயாபெற்ற வாக்குகள் 64,470 . நோட்டாவுக்கு 9082 வாக்குகள்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com