'வட மாநிலங்களிலும் விஜய்யின் தாக்கம் உள்ளது' - அமைச்சர் செங்கோட்டையன்
வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், வடஇந்தி பேசும் மாநிலங்களிலும் முதல்வர் விஜய்யின் தாக்கம் அதிகரித்து வருவதாக கூறுகிறார். அங்குள்ள மக்கள் அவரைப் போன்ற தலைவரை முதல்வராக விரும்புவதாகவும், வெளிநாடுகளில் இருந்து 11,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்த விஜய் தூய்மையான, நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதாகவும் அவர் பாராட்டினார்.
இந்தி பேசும் மாநிலங்களிலும் முதல்வர் விஜய்யின் தாக்கம் அதிகமாக உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வட மாநில மக்கள் கூட அவரைப் போன்றதொரு தலைவர் முதல்வராக வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். மேலும், வெளிநாடுகளில் இருந்து 11,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ள முதல்வர் விஜய், தூய்மையான மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
இடைத்தேர்தலில் சிபிஐ தனித்துப் போட்டியிடுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த செங்கோட்டையன், தவெக தனித்து நின்றாலும் வெல்லும் இயக்கமாக உள்ளதாகக் கூறினார்.

