Aadhav Arjuna, Leema Rose martin & Jose Charles Martin
Aadhav Arjuna, Leema Rose martin & Jose Charles Martinweb

ஒரே குடும்பம்.. 3 MLA-க்கள்.. மார்ட்டின் குடுபத்தினர் வெற்றி! அதிகாரத்தை கைப்பற்றும் தீவிர முயற்சி?

விஜயின் தவெகவின் வரலாற்று வெற்றிக்கு இடையில் மார்ட்டின் குடும்பத்தினர் மூன்று இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.
Published on
Summary

2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், பெரும்பான்மை எட்டாததால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது. இதே சூழலில், லாட்டரி மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்று, ஒரே குடும்பம் மூன்று எம்.எல்.ஏ.க்களாக உயர்ந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலில் போட்டியிட்ட லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் அனைவரும் வெற்றி பெற்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் 2026, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்திருக்கிறது. காலையில் இருந்தே பரபரப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தமிழக வரலாற்றில் யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்றிருக்கிறது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று சரித்திர வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இருப்பினும் பெரும்பான்மை எட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Aadhav Arjuna
Aadhav Arjunaweb

இதனால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்பட்டு கூட்டணி ஆட்சி ஏற்படும் என தெரிகிறது. அதே போல், கடந்த 50 ஆண்டுகளில் எந்த ஒரு புதிய கட்சியும் செய்யாத மாபெரும் சாதனையைத தமிழக வெற்றி கழகம் நிகழ்த்திக் காட்டியுள்ளது. 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட தவெக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றுள்ளது.

Aadhav Arjuna, Leema Rose martin & Jose Charles Martin
திமுகவிற்கு விழுந்த மாபெரும் இடி.. முன்னாள் திமுக MLA-க்கு எதிராகவே முதல்வர் ஸ்டாலின் தோல்வி!

தமிழகம் முழுவதும் பதிவான வாக்குகளில், தவெக கிட்டதட்ட 35 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. திமுக 25 சதவிகிதமும் அதிமுக 22 சதவிகிதமும் நாதக 4 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழகம் மட்டுமில்லாமல், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தலானது நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது.

Leema Rose Martin
Leema Rose Martinweb

குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தலில் போட்டியிட்ட லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் லாட்டரி மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் போட்டியிட்டனர். இதேபோன்று புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட்டார்.

Aadhav Arjuna, Leema Rose martin & Jose Charles Martin
MGR கூட செய்யாத சாதனை.. இந்தியாவையே அதிரவைத்த விஜய்! தட்டி தூக்கிய TVK!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேலும், லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, சுமார் 17000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Jose Charles Martin
Jose Charles Martin web

தொழிலதிபர் மார்ட்டின் மனைவியுமான லீமா ரோஸ் மார்ட்டின் அதிமுக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நடப்பாண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளது அரசியல் களத்தில் கவனிக்கப்பட்டுள்ளது. அனைத்துமட்டத்திலும் அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான மார்ட்டின் குடும்பத்தினரின் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது

Aadhav Arjuna, Leema Rose martin & Jose Charles Martin
TN Election 2026 | ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை.. அதிமுக or காங்கிரஸ் or யாரை அழைக்கும் தவெக.?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com