மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்புதியதலைமுறை

மருத்துவர் சொல்லை கேட்காமல் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்.. முடிவுக்கு காரணம் என்ன?

வேலூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரையின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மன்சூர் அலிகான், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆகியுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு முடிவடைந்த நிலையில், இவர் நேற்று காலை முதல் ஆம்பூர் - வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அப்போது குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலை 6 மணி அளவில் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மன்சூர் அலிகான்
ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்ட்லேவின் சர்க்கரை அளவு அதிகரிப்பு.. ஆய்வில் பகீர் தகவல்!

இதற்கிடையே, அறிக்கை வெளியிட்ட அவர், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க... குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி... உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet குடுத்தும் வலி நிக்கல. அதிகமாக சென்னைக்கு K.M. நர்ஸிங் ஹோமுக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தான், மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். உடல்நிலை சரியில்லாத போதும், டாக்டர்கள் ஆலோசனைகளையும் மீறி, தான் போட்டியிடும் வேலூர் தொகுதி மக்களை பார்க்க மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிகிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து வேலூர் செல்கிறார் மன்சூர் அலிகான்.

தமிழ்நாடு மற்றும் புதுவை என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மன்சூர் அலிகான்
‘கோவையில் அண்ணாமலை ஜெயிக்கமாட்டாரா?’-விரக்தியில் ஆள்காட்டி கைவிரலை துண்டித்துக் கொண்ட பாஜக நிர்வாகி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com