madurai corporation property fraud case mayor husband arrested
maduraix page

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு.. மேயரின் கணவர், உதவி ஆணையர் அதிரடி கைது!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு வழக்கில் அதிரடி திருப்பமாக, மேயரின் கணவர், உதவிஆணையர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on

கோடி ரூபாய் சொத்து வரிமுறைகேடு வழக்கினை, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் டிஐஜிஅபினவ்குமார் தலைமையிலான சிறப்புகுழு விசாரணை மேற்கொண்டுள்ளது. சொத்து வரி விதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மேயரின் கணவர் பொன்.வசந்த், உதவி ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

madurai corporation property fraud case mayor husband arrested
maduraix page

இதையடுத்து மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த்தை சென்னையில் கைது செய்த போலீசார் அவரை மதுரை கொண்டு அழைத்துச் செல்கின்றனர். முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டு மதுரைக்கு கொண்டு வரப்பட்டார். கண்ணனிடம் மேற்கொண்ட விசாரணையின் பேரில் மேலும் சில அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதுவரை இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், சொத்துவரி விதிப்புக்குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உட்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

madurai corporation property fraud case mayor husband arrested
நெருங்கும் தேதி.. மதுரை மாநாட்டுத் திடலில் போலீஸ் அதிகாரிகள்.. காவல்துறை அனுமதி எப்போது?
madurai corporation property fraud case mayor husband arrested
சு.வெங்கடேசன் எம்பியின் புகார்களால் அதிரும் மதுரை அரசியல்.. நிர்வாகிகளுக்கு மாவட்ட திமுக கடிவாளம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com