சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்
சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்புதிய தலைமுறை

வங்கக்கடலில் உருவானது அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. எங்கெங்கு எப்போது மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவாகியுள்ளாது அடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.
Published on

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகோப்பு படம்

அவர் கூறுகையில், “இச்சலனம் சாதகமானதாகவே இருக்கும். சாதகமான கடல் வெப்பநிலை, கடல் சார்ந்த அலைவுகள் மற்றும் காற்று முறிவு காரணமாக மழைப்பொழிவை கொடுக்கூடிய சலனமாக அமையும். தென்மேற்கு வங்ககடலில் இருந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும் போதும் மிக மெதுவாக நகர்வதற்கும், கடல்பகுதியில் ஒரே இடத்தில் மையம் கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்
தமிழக முதல்வர், துணை முதல்வர், ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் நரசிம்மன் கைது

டிசம் 16ம் தேதி இரவு அல்லது நள்ளிரவு முதல் மழை துவங்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 17 காலை முதல் டிஆம் 20 வரையிலான 4 நாட்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும். குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17,18, 19 தேதிகளில் பரவலாக மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு பகுதி
காற்றழுத்தத் தாழ்வு பகுதிகோப்பு படம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூரில் டிசம்பர் 17-19 தேதிகளில் பரவலாக கன முதல் மிககனமழை வரை எதிர்ப்பார்க்கலாம். சலனத்தின் நகர்வை பொறுத்து குறிப்பிட்ட சில பகுதிகளில் அதித கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளது. அதேபோல டெல்டா மாவட்டங்களில் டிசம் 17,18, ஆகிய தேதிகளில் பரவலாக கனமழையும், ஒருசில இடங்களில் மிககனமழையும் பதிவாகும்.

சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு –தனித்தீவு போல் காட்சியளிக்கும் புன்னக்காயல்

அத்தோடு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நீர் நிலைகளில் நீர் இருப்பு வெகுவாக கொள்ளவை எட்டியுள்ளது, மண்ணின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக சற்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. ஃபெஞ்சல் புயல் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சற்று கூடுதல் எச்சரிக்கை தேவை. இச்சலனம் வலுவிழந்த பின்பு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென்மாவாட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழகக்திலும் பரவலாக மழையை கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com