“அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டவங்க அதிமுக வேட்பாளரா?’’ - நெல்லை வேட்பாளர் மாற்றப்பட்ட பின்னணி?

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச் சோழன் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஜான்சிராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஜான்சிராணி, சிம்லா முத்துச் சோழன்
ஜான்சிராணி, சிம்லா முத்துச் சோழன்ட்விட்டர்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக-வின் ரத்தத்தின் ரத்தங்கள் கோரஸாக “கட்சியில சேர்ந்து 15 நாள்தான் ஆகுது... அம்மாவையே எதிர்த்து நின்னவங்க... அவங்களுக்கு சீட்டா? உடனடியாக வேட்பாளரை மாத்துங்க... இல்லைன்னா தேர்தல் வேலை பார்க்கமாட்டோம்’’ என குரலெழுப்ப, திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச் சோழன் மாற்றப்பட்டிருக்கிறார்.

அவருக்குப் பதிலாக திருநெல்வேலி புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஜான்சிராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மாற்றப்பட்டதற்கான காரணங்கள் என்னவெனப் பார்ப்பதற்கு முன்பாக சிம்லா முத்துச் சோழன் குறித்துப் பார்ப்போம்.

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் PT WEB

யார் இந்த சிம்லா முத்துச் சோழன்?

திமுகவின் முன்னாள் அமைச்சரும் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த சற்குணப் பாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச் சோழன். கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்விகமாகக் கொண்டவர் சிம்லா முத்துச்சோழன். ஆனால், வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில்தான். எல்.எல்.பி முடித்த இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார். அவரது கணவர் முத்துச் சோழனும் வழக்கறிஞர்தான்.

சிம்லா முத்துச் சோழன் திமுகவில் மாநில மகளிர் அணியின் பிரசாரக்குழு செயலாளராக இருந்தவர். அதுமட்டுமல்லாது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே.நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்.

அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியபோதும் தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்,2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக போட்டியிட சீட் கேட்டவருக்கு, திமுகவில் சீட் வழங்கப்படாமல் இருக்க, கடந்த மார்ச் ஏழாம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

ஜான்சிராணி, சிம்லா முத்துச் சோழன்
திருநெல்வேலி: அசால்ட்டாக இளவட்டக் கல்லை தூக்கி, தலையைச் சுற்றி வீசி அசத்திய பெண்கள்...!

இந்தநிலையில், சமீபத்தில் வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் திருநெல்வேலியில் அவர் போட்டியிடுவார் என்று அறிவித்தது அதிமுக தலைமை. அவர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி அதிமுகவில் ஏகப்பட்ட புகைச்சல்.

“கட்சியில் சேர்ந்து பத்து நாளில் எம்.பி.சீட்டா? அதுமட்டும் இல்ல... அந்தம்மாவுக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்மந்தம்..? அவங்க பிறந்தது கன்னியாகுமரி.. வளர்ந்தது இப்போ வேலை செய்யுறது எல்லாமே சென்னையில!” என அதிமுக தொண்டர்கள் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர்.

சிம்லா முத்துச்சோழன்
சிம்லா முத்துச்சோழன்

‘அதுமட்டுமல்ல, அம்மாவை எதிர்த்துப்போட்டியிட்டவர். அவருக்கு சீட் கொடுக்கலாமா?’ எனவும் அதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்க, தற்போது வேட்பாளரை மாற்றியிருக்கிறது அதிமுக தலைமை.

இப்படியாக திமுகவில் தொடர்ந்து சீட் கிடைக்கவில்லை என்கிற அதிருப்தியில் அதிமுகவில் கடந்த மார்ச் மாதம் ஏழாம் தேதி இணைந்த சிம்லா முத்துச் சோழனுக்கு, அதிமுகவில் சீட் கொடுக்கப்பட்டு பறிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேற்கண்ட காரணங்களைத் தவிரவும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பொதுவாக திமுக, அதிமுக சார்பில் பெரும்பாலும் நாடார் சமூகத்தினரையே வேட்பாளராகக் களமிறக்குவது வழக்கம். இந்தநிலையில், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் களமிறக்கியது மேலும் கட்சிக்குள் புகைச்சலை உண்டாக்கியிருக்கிறது. இந்தநிலையில், திருநெல்வேலி புறநகர் மாவட்ட இணைச் செயலாளரும் திசையன்விளை பேரூராட்சித் தலைவருமான ஜான்சிராணி வேட்பாளராக மாற்றி அறிவிக்கபப்ட்டிருக்கிறார்.

ஜான்சிராணி
ஜான்சிராணி

இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அதிமுக-வில் இனியாவது புகைச்சல் குறைய வேண்டும் என்பதே தலைமையின் விருப்பமும்கூட!

இதையும் படிக்க: இமாச்சல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்எல்ஏக்கள்.. பாஜகவில் ஐக்கியம்.. தேர்தலில் போட்டி?

ஜான்சிராணி, சிம்லா முத்துச் சோழன்
மக்களவைத் தேர்தல் 2024: நேரடியாக மோதிக்கொள்ளும் திமுக - பாஜக.. அதிமுக - பாஜக.. எங்கெல்லாம் தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com