Vijay
Vijay X

தவெக | 23 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் அறிவிப்பு.. விவரம்!

பெண் வாக்காளர்கள் ஆண்களை விட அதிகமாக இருந்தும், பெண்களுக்கு குறைந்த அளவே சீட் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
Published on
Summary

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 23 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழத்தின் வேட்பாளர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார் .

vijay
vijay facebook

இந்தப் பட்டியலில் 234 தொகுதிகளில் 23 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக திமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 18 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியில் 117 (50%) பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 23 பெண் வேட்பாளர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

Vijay
’PhD வரை படிக்க பிணையில்லா கடன்..’ கவனம் ஈர்க்கும் விஜய்யின் இளைஞர்களுக்கான 10 வாக்குறுதிகள்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களை இன்று நுங்கம்பாக்கம் தனியார் ஹோட்டலில் நடந்த வேட்பாளர் அறிமுக விழாவில் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜயே போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். மீதமிருக்கும் 232 தொகுதிகளில் 23 இடங்களில் பெண் வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தவெக பெண்வேட்பாளர்களின் பட்டியல் இதோ,

1. சத்தியபாமா - திருப்பூர் வடக்கு

2. விஜயலட்சுமி - குமாரபாளையம்

3. பல்லவி - திரு வி க நகர்

4. காமாட்சி - பல்லாவரம்

5. தாகிரா - ராணிப்பேட்டை

6. சிந்து - குடியாத்தம்

7. திலகவதி - பாப்பிரெட்டிப்பட்டி

8. சுஜாதா - கெங்கவல்லி

9. விஜயலட்சுமி - ஏற்காடு

10. கௌரி சித்ரா - தாராபுரம்

11. கலைச்செல்வி - பவானி சாகர்

12. கமலி - அவிநாசி

13. கனிமொழி - கவுண்டம்பாளையம்

14. கலை செல்வி - ஆத்தூர்

15. நாகஜோதி - வேடசந்தூர்

16. ரேவதி - குன்னம்

17. சிந்தாமணி - திருமயம்

18. குழந்தை ராணி நாச்சியார் - சிவகங்கை

19. ஜெகதீஸ்வரி - ராஜபாளையம்

20. மலர்விழி - முதுகுளத்தூர்

21. எழில் கேத்ரின் - மதுராந்தகம்

22. அமுதராணி - வாசுதேவ நல்லூர்

23. கீர்த்தனா - சிவகாசி

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 (2,89,60,838) ஆகும். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட சுமார் 12.21 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஆளும் திமுக முதல் புதிதாக வந்திருக்கும் தவெக வரை - அவர்கள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொன்றும் பெண்கள் வாக்கினை கவரும் வகையிலேயே இருக்கும் . ஆனால் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவானதாகவே இடம்பெறுகின்றனர்.

Vijay
ஒரே ஆள் ஜெயலலிதா.. 2வது விஜய் மட்டுமே.. தமிழக அரசியலில் அரிதான நிகழ்வு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com