இடிக்கப்பட்ட கேபிஎஸ் திரையரங்கம்
இடிக்கப்பட்ட கேபிஎஸ் திரையரங்கம்pt web

முன்னாள் முதல்வர்கள் மூன்றுபேர் கலந்து கொண்ட திறப்புவிழா.. இடிக்கப்பட்ட கேபிஎஸ் தியேட்டர்!

தமிழகத்தில் மறைந்த மூன்று பெரும் தலைவர்களால் திறந்து வைக்கப்பட்ட சிறப்பிற்கும், கொடுமுடி நகரின் அடையாளமாகவும் விளங்கிய திரையரங்கம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர் மணிகண்டன்

தமிழகத்தில் மறைந்த மூன்று பெரும் தலைவர்களால் திறந்து வைக்கப்பட்ட சிறப்பிற்கும், கொடுமுடி நகரின் அடையாளமாகவும் விளங்கிய திரையரங்கம் ஒன்று தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீராங்கனை, பாடகி, நாடக நடிகை என பன்முகத்தன்மை கொண்ட கே.பி சுந்தரமாளுக்கு சொந்தமான ’கே.பி.எஸ் திரையரங்கம்’ இடிக்கப்பட்ட நிலையில், அவரின் நினைவாக கொடுமுடியில் சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அளப்பரிய குரல்வளம்.. அற்புதமான பாடகி.. அந்நிய நாட்டினரை எதிர்த்த அசாத்தியமான துணிச்சல்.. அந்த காலத்திலேயே ஒருலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை என அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் கே.பி. சுந்தராம்பாள்..

இடிக்கப்பட்ட கேபிஎஸ் திரையரங்கம்
சாதியை உடைத்தெறிய தயாரான மக்கள்!! பூனைக்கு மணி கட்டிய ‘Society பாவங்கள்’ தெருவில் இறங்கப்போவது யார்?

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 1908ம் ஆண்டு பிறந்த கே.பி சுந்தராம்பாள் தனது குரல் வளத்தாலும் ஆர்வத்தாலும் நாடகத்துறையில் ஈடுபட்டு தனக்கென்று தனி தடம் பதித்தார். இந்திய சுதந்திர போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பங்கெடுத்திருக்கிறார். 1935ம் ஆண்டு கே.பி சுந்தராம்பாள் வீட்டிற்கு வந்த காந்திக்கு தங்க தட்டில் உணவு பரிமாறப்பட்டது. பின்னர், காந்தி கேட்டுக்கொண்டதன்படி தங்கத்தட்டை அவருக்கே வழங்கினார் கே.பி சுந்தராம்பாள்.

1935ம் ஆண்டு "பக்தநந்தனார்" படத்தில் நடிப்பதற்காக, கேபி சுந்தராம்பாள் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெற்றது அக்காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடத்த கே.பி சுந்தராம்பாள் பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இப்படி தனது குரல் மற்றும் நடிப்புத் திறமையால் மிகப்பெரிய புகழையடைந்த கே.பி.சுந்தராம்பாள் 1968ம் ஆண்டு கொடுமுடியில் கே.பி.எஸ் என்ற பெயரில் திரையரங்கை கட்டத்தொடங்கி 1969ல் கட்டி முடித்தார்.

கே.பி.எஸ் திரையரங்கு திறப்புவிழாவில் அன்றைய முதல்வர் கருணாநிதி, தமிழ்திரையுலகில் கொடிகட்டிபறந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் என்ற கே.பி.சுந்தராம்பாளின் கோரிக்கையை ஏற்று கொடுமுடி வந்த மூவரும் கே.பி.சுந்தராம்பாள் வீட்டில் தங்கியிருந்தனர். அவர்களைக் காண கட்சியினர் மற்றும் ரசிகர்கள் அதிகளவில் கூடியதால், மூவரையும் திறந்த வெளிவாகனத்தில் திரையரங்கிற்கு அழைத்துச்சென்ற திரையரங்கு திறப்புவிழாவில் கலந்து கொள்ளவைத்தார் கே.பி.சுந்தராம்பாள்.

இடிக்கப்பட்ட கேபிஎஸ் திரையரங்கம்
பாரம்பரியமா, நவீன பெண்ணடிமையா? பெண்கள் முன்னேற்றத்திற்கு ‘ஆப்பு’ வைக்கும் ட்ரெண்ட்! | Tradwife

மூன்று மிகப்பெரிய தலைவர்களை ஒரே மேடையில் அமரவைத்து நிகழ்ச்சி நடத்திய பெருமைக்குரிய கே.பி.எஸ் திரையரங்கம், பல்வேறு வெற்றிப்படங்களால் பெரும்பாலான நேரங்களில் நிரம்பி வழிந்தது.

கரூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் இரண்டு மாவட்ட ரசிகர்களும் கே.பி.எஸ் திரையரங்கிற்கு படையெடுத்தனர். பின்னாளில் கே.பி.எஸ் திரையரங்கு கொடுமுடியின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது. 1969ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை திரையரங்கம் செயல்பட்டுவந்தது. சொத்து பிரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விற்கப்பட்ட இந்த திரையரங்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திரைப்படங்கள் திரையிடப்படாமலே இருந்தது.

இந்நிலையில், கே.பிசுந்தராம்பாளின் கே.பி.எஸ் திரையரங்கம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. கொடுமுடியின் அடையாளம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், பெருமைக்குரிய கே.பி.சுந்தராம்பாளுக்கு அவரது சொந்த ஊரில் வெண்கல சிலை அமைக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இடிக்கப்பட்ட கேபிஎஸ் திரையரங்கம்
உணவக லைசன்ஸ் | இனி மெனுக்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.. அரசு நடவடிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com