இந்திய உணவகம்
இந்திய உணவகம்web

உணவக லைசன்ஸ் | இனி மெனுக்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.. அரசு நடவடிக்கை!

உணவகங்கள் பதிவுசெய்யும் போது இனி சைவமா, அசைவமா உணவகத்தில் என்னவெல்லாம் பரிமாறப்படும் போன்ற மெனுக்களின் விவரங்களை வெளிப்படையாக சொல்லவேண்டும் என்ற நடவடிக்கையை அரசு விரைவில் எடுக்கவிருக்கிறது.
Published on

உணவக உரிமத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் தாங்கள் தொடங்கவிருக்கும், உணவகத்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்படும் என்பதை குறிப்பிட வேண்டும் என்ற விதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக Mint நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உணவு பட்டியலில் வெளிப்படைத்தன்மை வேண்டும்..

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையத்தின் மத்திய ஆலோசனைக் குழு அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தப் பரிந்துரையை முன்வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் உணவகங்களும் தாங்கள் என்னென்னஉணவுகளை வழங்குகிறோம் என்று தெரிவிக்க வேண்டும்.

சைவஉணவகங்கள் அசைவ உணவகங்களாக மாறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் இந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய உணவகம்
இந்திய உணவகம்

இந்தியாவில் பல்வேறு கலாசாரங்களும் நம்பிக்கைகளும் இருப்பதால் உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகுறித்து வெளிப்படைத்தன்மை அவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com