\
Katpadi Railway Station Revamp Delayed: When Will It Be Completed?
காட்பாடிAI

காட்பாடி ரயில் நிலையம்.. மேம்பாட்டு பணிகள் தாமதம் ஏன்?

காட்பாடி ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான திட்டம், அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் ஆகியும், எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு காரணம் என்ன? ரயில் நிலையப் பணிகள் எப்போது முடிவடையும்.
Published on: 

தமிழக அளவில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரயில் நிலையங்கள் பட்டியலில் 6வது இடத்திலும், வேலூர் மாவட்டத்தின் முக்கிய ரயில் போக்குவரத்து மையமாகவும் திகழ்வது காட்பாடி ரயில்நிலையம். ஆந்திரா, கர்நாடகாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த நிலையம், வேலூரின் மருத்துவம், கல்வி, ஆன்மிகம் மற்றும் சுற்றுலா சார்ந்த போக்குவரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. 5 நடைமேடைகள், 9 இருப்புப் பாதைகள் கொண்ட இந்தச் சந்திப்பின் வழியாக, தினசரி 200க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. அதில் 125 ரயில்கள் நின்று செல்கின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.

காட்பாடி
காட்பாடிindia rail info

இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த 2022இல் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். 365 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளை நெருங்கும் நிலையில், எதிர்பார்த்த அளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Katpadi Railway Station Revamp Delayed: When Will It Be Completed?
அதி கனமழை | சென்னைக்கு ரெட் அலர்ட்; செல்போன்களில் எச்சரிக்கை அலாரம்!!

வேலூர் கோட்டையின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புடன் 2 முனையங்கள், மின்தூக்கிகள், 2 நடை மேம்பாலங்கள், 4 மாடிகள் கொண்ட வணிக வளாகம் உள்ளிட்ட வசதிகள் காட்பாடியில் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் பணிகளின் நிலையோ படுமோசம் என்கிறார்கள் பயணிகள். ஆனால் முதற்கட்ட ஒப்பந்ததாரர் விலகியதும், 2வது ஒப்பந்ததாரர் முறையாகப் பணிகளை மேற்கொள்ளாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தற்போது மூன்றாவது நிறுவனம் பணிகளைத் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். காட்பாடி ரயில் நிலையத்தின் மறுசீரமைப்புத் திட்டப்பணிகளை வேகப்படுத்தி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வேலூர் மாவட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பு.

Katpadi Railway Station Revamp Delayed: When Will It Be Completed?
”திரைக்கதை அரசியலும், வெற்று விளம்பரங்களும் தோற்றுப்போனது” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com