கோப்பு படம்
கோப்பு படம்மாதிரிப்படம்

சட்ட விரோத கல் குவாரி விவகாரம்.. செய்தியாளரை தாக்கிய ஊழியர்கள்.. திமுக எம்.எல்.ஏ மீது புகார்.!

கரூர் மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏ தொடர்புடைய கல் குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தமிழ் தொலைக்காட்சி குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பத்திரிகையாளர் சங்கங்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Published on

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இயங்கிவரும் கல்குவாரி விதிகளுக்குப் புறம்பாக செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதுகுறித்து ஆய்வு செய்ய தனியார் தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் திருச்சி மாவட்ட செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் ஆகியோர் ஐயர் மலைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். குவாரிக்கு அருகே ட்ரோன் கேமராவைப் பயன்படுத்திப் படம் பிடித்ததற்கு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் தங்களை தாக்கியதாகவும் செய்தியாளர்கள் புகார் கூறியுள்ளனர்.

திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி
திமுக எம்.எல்.ஏ பழனியாண்டிx

அந்த குவாரி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி தரப்புக்கு சொந்தமானது என்றும், எனவே குவாரி ஊழியர்களுடன் சேர்ந்து, எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களும் தங்களைத் தாக்கியதாகவும், அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் சென்ற வழக்கறிஞர் திருமலைராஜனும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருச்சி எஸ்பி ஜோஸ் தங்கையா உத்தரவின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் செய்திக் குழுவினரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கோப்பு படம்
ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் சட்டம் ரத்து.. உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.!

செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பத்திரிகையாளர் சங்கங்களும், டி.டி.வி. தினகரன், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது, செய்தியாளர்கள் தரப்பு தங்களை தாக்கியதாக குவாரி ஊழியர்களும் காவல்துறையில் புகாரளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டுவருவதாக திருச்சி காவல்துறை தெரிவித்துள்ளது.

கோப்பு படம்
அசாம் | ’மியா’ முஸ்லிம்களைத் தாக்கும் பாஜக.. முதல்வரின் பேச்சால் மாநிலத்தில் சலசலப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com