karuppaiah elected as TN interim speaker
கருப்பையாPT

தற்காலிக சபாநாயகர் நியமனம்.. சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு!

மே.12ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் எனத் தெரிகிறது.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய், இன்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் முதல் கையெழுத்திட்ட முதல்வர் விஜய், அதைத் தொடர்ந்து தனது முதல் உரையாற்றினார். அப்போது, ”திட்டங்களைச் செயல்படுத்த போதிய அவகாசம் வேண்டும். ஆட்சியில் ஜெயித்துவிட்டோம் என்று ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன். ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். எல்லோரும் சேர்ந்து புதிய ஆட்சியைத் தருவோம்” என்றார்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் விஜய், தனது அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து, அலுவலகக் கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர், அரசு அதிகாரிகள் பலரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

karuppaiah elected as TN interim speaker
“யாரும் ஆட்டம் ஆடுவோம்னு நினைச்சா..” - முதல்வரான பின்பு முதல் உரையாற்றிய விஜய்!

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை நாளை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா முன்னிலையில் புதிதாக தேர்வாகியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

அதற்குப் பின், மே.12ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் எனத் தெரிகிறது. 2011-16இல் அதிமுக எம்எல்ஏ ஆக இருந்த கருப்பையா, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

karuppaiah elected as TN interim speaker
சி.ஜோசப் விஜய் எனும் நான்.. முதல்வராக பதவியேற்பு.. ஆர்ப்பரித்த தொண்டர்கள்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com