"தூய்மைப்பணியாளர்களின் கால்களை கழுவி பூஜை செய்த நீதிபதிகள்" - என்ன காரணம் தெரியுமா?

உளுந்தூர்பேட்டையில் தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாதை பூஜை செய்த நீதிபதிகள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மைபணியாளர்களுக்கு பூஜை செய்த நீதிபதி
தூய்மைபணியாளர்களுக்கு பூஜை செய்த நீதிபதி file image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் தூய்மைபணியாளர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை நகராட்சி நிர்வாகம் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில் நீதிபதிகள் மற்றும் நகராட்சி தலைவர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களின் பணிகள் குறித்தும் அவர்களின் அர்ப்பணிப்பு குறித்தும் பாராட்டி பேசினர். அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நீதிபதிகள் தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாத பூஜை செய்து கையெடுத்து கும்பிட்டு மரியாதை செலுத்தினர்.

தூய்மைபணியாளர்களுக்கு பூஜை செய்த நீதிபதி
மிசோரம், சத்தீஸ்கர் தேர்தல்: பதிவான வாக்குகள் குறித்து தேர்தல் ஆணையம் கொடுத்த தகவல்!

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள தூய்மைப்படுத்துவதற்காக தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்தனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப்பணியாளர்கள் தங்களுடைய தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தூய்மைப்பணியாளர்களின் பாதங்களை கழுவி மரியாதை செலுத்திய நீதிபதிகளின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மைபணியாளர்களுக்கு பூஜை செய்த நீதிபதி
"பாஜக ஆட்சிக்கு வந்தால்..." - அண்ணாமலை விமர்சனமும் சேகர்பாபு பதிலும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com