"பாஜக ஆட்சிக்கு வந்தால்..." - அண்ணாமலை விமர்சனமும் சேகர்பாபு பதிலும்

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று அண்ணாமலை பேசியதற்கு, தமிழகத்தில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது என்று சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு, அண்ணாமலை
சேகர்பாபு, அண்ணாமலைpt web

“தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது. பாஜக ஆட்சியின் முதல் நாள்தான் இந்து சமய அறநிலையத் துறையின் கடைசி நாள். பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் முன் உள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவரின் சிலை அகற்றப்படும்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திருச்சியில் பேசியிருந்தார்.

temple
templefile images

இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்களிடம் இன்று காலை பேசிய அமைச்சர் சேகர் பாபு, “தமிழகத்தில் எத்தனை முறை மத்திய அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்தினாலும், எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது. பெரியார் கொள்கை கொண்டவர்கள், ஆன்மிக வாதிகளை அரவணைத்துச் செல்லும் அரசாக திமுக இருக்கிறது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com