ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சிPt web

’தவெகவிற்கான ஆதரவு வாபஸ்..’ - ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி.!

தவெகவின் செயல்பாடு மீதான அதிருப்தி காரணமாக அக்கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று கொள்வதாக ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
Published on
Summary

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி, தவெகவிற்கு ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. கரூர் துயர சம்பவம் மற்றும் விஜயின் செயல்பாடுகள் காரணமாக, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், தவெக கட்சி மேலும் சிக்கலில் சிக்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கட்சியின் முதல் மாநாட்டிலேயே தவெக தலைவர் விஜய் அறிவித்தும் எந்தப் பெரிய கட்சிகளும் தவெகவுடன் கூட்டணியில் இணையவில்லை. கடைசி வரை கூட்டணியில் இணையும் என நம்பப்பட்ட காங்கிரஸும் திமுகவுடன் கூட்டணியில் இணைந்துவிட்டது.

இதற்கிடையில், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம், ஜனநாயகன் சென்சார் பிரச்சனை, விஜயின் விவகாரத்து பிரச்சனை போன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கி தொடர்ச்சியாக பேசுபொருளாகி வருகிறார் தவெக தலைவர் விஜய்.

விஜய்
விஜய்Pt web

இந்த சூழலில் தான், 8 மாதங்களுக்கு மேலாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி, தவெகவிற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக தெரிவித்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்த அந்த கட்சி கடந்த ஆண்டு தவெகவிற்கு ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தான், தவெகவின் கொள்கை மற்றும் செயல்பாடு காரணமாக அக்கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்திருக்கிறது.

ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
கரூர் | 41 பேர் உயிரிழப்பு விவகாரம்.. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் செந்தில் பாலாஜி.!

இதுதொடர்பாக, ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சித் தலைவர் எம்.எஃப் தமீம் அளித்த பேட்டியில், “கரூர் துயர சம்பவம் நடைபெற்ற பிறகு, விஜயை நேரில் சந்தித்து மக்களை சந்திக்க கூறினோம். ஆனால், அவர் அதை செய்யவில்லை. 8 மாதங்களாக தவெகவுடன் பயணித்து வந்தோம். இந்த சூழலில், அவர்களின் செயல்பாடு காரணமாக, தவெகவிற்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். தற்போது, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம். மேலும், தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

ஏற்கனவே, எந்தக் கட்சிகளும் தவெகவுடன் கூட்டணியில் இணையாத நிலையில், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஜமுமக-வும் தற்போது தனது ஆதரவை திரும்பெற்றிருக்கிறது. அதேவேளையில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மற்றும் எம்.ஜி.ஆர் அதிமுக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி
நெருங்கும் தேர்தல்.. NDA கூட்டணியில் விஜயா? நயினார் நாகேந்திரன் சொன்ன தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com