அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எ.வ.வேலுவிற்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, மருத்துவமனை சார்ந்த கல்லூரி, அவரது வீடு என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எ.வ.வேலு தற்போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என இரு முக்கியமான துறைகளின் அமைச்சராக உள்ளார். எனவே அவர் வகிக்கும் துறைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பதன் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

அண்மையில் எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

எ.வ.வேலு
எம்.பி ஜெகத்ரட்சகன் விவகாரம்: வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கை; கண்டுபிடிக்கப்பட்டவ என்னென்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com