விஜய், எம்ஜிஆர்
விஜய், எம்ஜிஆர்pt web

எம்ஜிஆர் - விஜய் ஒப்பீடு சரியானதா? எம்ஜிஆர் செய்தது என்ன? விஜய் செய்ய வேண்டியது என்ன? - ஓர் அலசல்

எம்ஜிஆர் - விஜய் ஒப்பீடு ஏற்கனவே இருந்தது. அவர் அரசியல் கட்சி தொடங்கிய பின் அது இன்னும் அதிகமானது. தற்போது நான் ஆணையிட்டால் எனும் வார்த்தைகளும் கைகளில் இருக்கும் சாட்டையும் அந்த விவாதத்தினை சூடுபடுத்தியுள்ளது.
Published on

நான் ஆணையிட்டால்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 69 ஆவது திரைப்படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்திற்கான பெயரைத் தாண்டி படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர்தான் பலரையும் பேசவைத்துள்ளது. ஏனெனில், இரண்டாவதாக வெளியான போஸ்டரில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பாணியில் விஜய் சாட்டையை சுழற்றுவதும், ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் வரியும் இடம்பெற்றுள்ளன.

விஜய், எம்ஜிஆர்
விஜய், எம்ஜிஆர்

விஜய் தனது ஆரம்ப கட்டத்தில் இருந்தே தான் எம்ஜிஆர் ரசிகன் என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வந்தவர், வசீகராவில் தொடங்கி, பைரவா, மெர்சல், பிகில் என பல படங்களில் எம்ஜிஆர் ரெஃபரென்ஸ் வைத்தவர். இசைவெளியீட்டு விழா மேடைகளிலும் எம்ஜிஆரைக் குறிப்பிட்டுப் பேசியவர்.

விஜய், எம்ஜிஆர்
“அஜித் கை தூக்கிவிட்டவர்களில் நானும் ஒருவன்” - இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சி!

எழும் கேள்வி

எம்ஜிஆர் - விஜய் ஒப்பீடு ஏற்கனவே இருந்தது. அவர் அரசியல் கட்சி தொடங்கிய பின் அது இன்னும் அதிகமானது. தற்போது நான் ஆணையிட்டால் எனும் வார்த்தைகளும் கைகளில் இருக்கும் சாட்டையும் அந்த விவாதத்தினை சூடுபடுத்தியுள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆர் விஜய் ஒப்பீடு சரியானதா எனும் கேள்வியும் எழுகிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்த அரசியல் களம் வேறு. தனியே கட்சி தொடங்குவதற்கு முன் அரசியலில் அவரது செயல்பாடுகளும், அவரது அனுபவங்களும், திமுகவில் இருந்தபோதே தனது ரசிகர்மன்றங்களை அவர் நிர்வகித்த விதமும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று.

விஜய், எம்ஜிஆர்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜன நாயகன்' ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

எம்ஜிஆர் - விஜய் ஒப்பீடு சரியானதா?

எம்ஜிஆர் - விஜய் ஒப்பீடு சரியானதா? என்பது குறித்துப் பேச பத்திரிகையாளர் ராஜ கம்பீரனைத் தொடர்பு கொண்டோம். அவர் பேசியதாவது, “எம்ஜிஆர் செயற்பாட்டாளராக மிக நீண்ட காலம் அறியப்பட்டவர். தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தொடங்கி, பின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நட்பு கிடைத்து திமுகவில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கொடை வள்ளலாக பலருக்கு உதவி செய்ததில் இருந்து, பொதுவாழ்க்கைக்கான முன்னோட்டம் அவருக்கு இயல்பாகவே இருந்தது.

எம்ஜிஆர் செயற்பாட்டாளராக மிக நீண்ட காலம் அறியப்பட்டவர். தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் தொடங்கி, பின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நட்பு கிடைத்து திமுகவில் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

MGR
MGRfile

பின்னாட்களில் திமுகவுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் வேறு கட்சியை உருவாக்கி அவர் தலைவர் ஆனது என்பது எதிர்பாராத சம்பவங்களால் உருவானது. 20 வருடங்களாக திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக, பொருளாளராக இருந்துள்ளார். கட்சிக்காக தொடர்ச்சியாக பயணங்கள் செய்துள்ளார். அந்த உழைப்பை கழித்துவிட்டு ஒருவர் எப்படி எம்ஜிஆராக ஆக முடியும். எம்ஜிஆர் போல் ஆவதற்கு எம்ஜிஆருடைய உழைப்பு என்ற ஒன்று இருக்கிறதுதானே?

விஜய், எம்ஜிஆர்
சயீஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம்: “என் வாழ்க்கையே போய்விட்டது” - கைதாகி விடுதலையானவர் கண்ணீர்!

20 வருடங்களாக திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக, பொருளாளராக இருந்துள்ளார். கட்சிக்காக தொடர்ச்சியாக பயணங்கள் செய்துள்ளார். அந்த உழைப்பை கழித்துவிட்டு ஒருவர் எப்படி எம்ஜிஆராக ஆக முடியும்.

நம்பகத்தன்மையைப் பெற்றவரா?

நடிகராக விஜய் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்ததினால் மட்டும்தானே இந்த இடத்தினை அடைந்திருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே விஜய் சூப்பர் ஸ்டாராக ஆக முடியுமா? ஒருவருடைய உழைப்புதானே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு துறையில் பெற்ற வெற்றி இன்னொரு துறைக்கு முழுமையாக பயன்படும் என்பதை எப்படி ஏற்க முடியும்.

எல்லோராலும் அறியப்பட்டவர் விஜய் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், எல்லாருடைய நம்பகத்தன்மையையும் பெற்றவராக இருக்க வேண்டுமே. அரசியலில் பாப்புலாரிட்டி என்பது எல்லோருக்கும் தெரிந்தவர் என்ற கணக்கில்தான் வரும். ஆனால், நம்பகத்தன்மை என்பது வேறு.

விஜய் - விஜயகாந்த்
விஜய் - விஜயகாந்த்புதிய தலைமுறை

எடுத்த எடுப்பிலேயே விஜய் சூப்பர் ஸ்டாராக ஆக முடியுமா? ஒருவருடைய உழைப்புதானே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

உதாரணமாக, விஜயகாந்த் எல்லோருக்கும் தெரிந்தவர். சினிமாவில் இருந்தபோதே, வாய்ப்பு தேடி வந்தவர்களுக்கு எல்லாம் உணவளித்தார், புதுப்புது கலைஞர்களுக்கு வாய்ப்பளித்தார். தன் திரைவாழ்வில் 465 புதிய கலைஞர்களுக்கு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை உருவாக்கியுள்ளார். விஜய் சினிமாவில் யாரையாவது உருவாக்கியுள்ளாரா?

பெரிய வெளிச்சத்திற்கு வந்துவிட்டோம். இதை இன்னொரு துறைக்கான முதலீடாக பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் நினைக்கிறாரா எனத் தெரியவில்லை. இது முதற்கட்டமாக கூட்டத்தினைச் சேர்க்கும். ஓட்டுக்கள் கிடைக்குமா என்பதில் சந்தேகம்தான்.

விஜய், எம்ஜிஆர்
பன்றியின் உடல் உறுப்பை பெற்று நீண்ட நாட்கள் நலமுடன் வாழும் பெண்.. மகிழ்ச்சியில் மருத்துவக்குழு!

விஜய் பார்ட் டைம் அரசியல்வாதிதான்..

EX CM எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா
EX CM எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவிற்குள் சென்று ஜெயலலிதா அதைப் பராமரித்தார். அதிமுக என்பது கட்டிமுடித்த மாளிகை. அது ஜெயலலிதா உருவாக்கிய கட்சி அல்ல. திமுக என்பதும் ஏற்கனவே நிறுவப்பட்ட கட்சி. அதில், புதிதாக கிளைச்செயலாளர் போடும் வேலைகள் எல்லாம் இருக்காது. ஏற்கனவே தயாராக உள்ள வாகனத்தில் ஏறிச் செல்வதுபோல். அக்கட்சியை உதயநிதி பராமரித்தால் போதும். ஆனால், விஜய்க்கு அப்படி இல்லை. அவர் இனிதான் உருவாக்க வேண்டும். விஜயகாந்த் உருவாக்கிய கட்சியை வைத்து விஜயகாந்தின் செல்வாக்கை பிரேமலதாவால் தற்போது பெறமுடியவில்லையே. பார்ட் டைம் அரசியல்வாதிகள் வெற்றிபெற மாட்டார்கள். அதற்கான அசுர உழைப்பு விஜயிடம் இல்லை. உதாரணத்திற்கு ஜெயலலிதா மிகத்தீவிரமாக அரசியல் செய்தவர். உண்ணாவிரதம் இருந்தது என்பது போன்று அரசியல் ரீதியாக நிறைய உழைத்துள்ளார்.

மாநாடு, புத்தக வெளியீட்டு விழா, ஆளுநரை சந்தித்தது, பரந்தூர் வந்தது என இவற்றிற்கிடையே சில மாதங்கள் இடைவெளி இருக்கிறது. எனவே, அவர் பார்ட் டைம் அரசியல்வாதிதான், முழு நேர அரசியல்வாதி இல்லை" எனத் தெரிவித்தார்.

விஜய், எம்ஜிஆர்
சேலம்: ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி - 7 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

திமுக என்பதும் ஏற்கனவே நிறுவப்பட்ட கட்சி. அதில், புதிதாக கிளைச்செயலாளர் போடும் வேலைகள் எல்லாம் இருக்காது. ஏற்கனவே தயாராக உள்ள வாகனத்தில் ஏறிச் செல்வதுபோல். அக்கட்சியை உதயநிதி பராமரித்தால் போதும். ஆனால், விஜய்க்கு அப்படி இல்லை

எதையும் காலம்தான் நிர்ணயிக்கும்

ராஜ கம்பீரன் முன்வைத்த கேள்விகளை வைத்து பத்திரிகையாளர் அய்யநாதனிடம் பேசினோம். அவர் பேசியதாவது, “எம்ஜிஆருக்கு இருந்தது மக்கள் மீதான அக்கறை. அந்த அக்கறை விஜய்க்கும் மக்கள்மீது உண்டு. எம்ஜிஆர் அரசியலிலும் இருந்தார், நடித்துக்கொண்டும் இருந்தார். விஜய் நடிக்க மட்டுமே செய்தார்.

எம்ஜிஆருக்கு அரசியல் தெரியும். விஜய்க்கு அரசியல் தெரியாது என்பதுதானே அவர்களது கருத்து. இதை காலம்தான் நிர்ணயிக்கும். விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதற்கான பதிலாக அமையும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்PT

தமிழக வெற்றிக் கழகம் இப்போதுதான் இயங்க ஆரம்பித்துள்ளது. அந்த இயக்கத்தின் ஊடாகத்தானே அந்த நம்பகத்தன்மை ஏற்படும். இப்போது மக்கள் மத்தியில் ஒரு அபிமானம் இருக்கிறது, அது நம்பகத்தன்மையாக மாற வேண்டும். அந்த நம்பகத்தன்மை ஏற்படுவதற்கான வேலைகளை தவெகவினரும் செய்ய வேண்டும், விஜயும் செய்ய வேண்டும். இன்று இருக்கும் அரசியல் சூழல்களை வைத்து எதையும் செய்ய முடியாது. ஒருவருடம் அவர்கள் வேலைபார்ப்பதை வைத்துதான் எதையும் தீர்மானமாக சொல்ல முடியும்.

விஜய், எம்ஜிஆர்
வெறும் நான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா? உலகையே அதிர வைக்கும் ஸ்டார்பக்ஸ் அதிகாரியின் ஊதியம்!

விஜய்தான் குரல் கொடுத்தார்..

கட்சியை கட்டமைக்க வேண்டும், உண்மைதான். யாருடைய வழியில் சென்றும் யாரும் சாதிக்க முடியாது. இன்று இருக்கும் சூழல்கள், பிரச்னைகள், தமிழ்நாட்டு மக்கள் மீதிருக்கும் அழுத்தங்கள் இதையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் அக்கட்சி தனது செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டும். ஏற்கனவே, ஒருவர் சென்ற பாதையில் விஜய் செல்வது அவருக்கு வெற்றிகரமாக இருக்காது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt web

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பில் அதிமுகவும், திமுகவும் எந்த இடத்தில் இருக்கிறது. இவர்களெல்லாம் மக்களுக்காக இருக்கிறோம் என்று சொல்வார்கள். விஜய் குரல்கொடுத்தார் தானே? அம்மாதிரி அவர்கள் யாரையாவது பேச சொல்லுங்கள் பார்ப்போம். அனைத்திற்கும் மேலாக விஜய்யின் அடுத்தடுத்த செயல்பாடுகள்தான் எல்லாவற்றிற்கும் பதில்களாக அமையும்” எனத் தெரிவித்தார்.

விஜய், எம்ஜிஆர்
பெங்களூரு|வாங்கிய கடனை திரும்ப செலுத்த சிறுநீரகத்தை விற்ற பெண்; பின்தொடர்ந்த தொல்லை!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பில் அதிமுகவும், திமுகவும் எந்த இடத்தில் இருக்கிறது. இவர்களெல்லாம் மக்களுக்காக இருக்கிறோம் என்று சொல்வார்கள். விஜய் குரல்கொடுத்தார் தானே? அம்மாதிரி அவர்கள் யாரையாவது பேச சொல்லுங்கள் பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com