\
cm vijay
cm vijayweb

31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்.. அரசியல் கலாச்சாரமாக உருவெடுக்கிறதா கூட்டணியாட்சி?

1952-ல் இந்தியாவில் முதல்முதலில் தமிழகத்தில் தொடங்கிய கூட்டாட்சி முறை 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என விரிந்தது. இந்தசூழலில் இந்திய அரசியலில் கூட்டாட்சி முறை புதிய கலசாரமாக உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Published on
Summary

1952ல் ராஜாஜி தலைமையில் தமிழகத்தில் இந்தியாவின் முதல் கூட்டணி அரசு உருவானாலும், பின்னர் திமுக, அதிமுக ஆதிக்கத்தால் ஏழு தசாப்தங்களுக்கு கூட்டணி அமைச்சரவை அமையவில்லை. 2006ல் திமுகவிற்கு பெரும்பான்மை இல்லாதபோதும் கூட்டணி அரசு உருவாகாத மரபு, 2026ல் விஜய் தலைமையிலான தவெக அரசு மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. 1967ல் காங்கிரஸ் பல மாநிலங்களில் பலவீனமடைந்ததிலிருந்து இந்திய அரசியலில் கூட்டணியாட்சி முறை அதிகரித்தது.

இந்தியாவில் இதுவரை கூட்டணிஆட்சியே காணாத பட்டியலில் இரு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. 2000 மற்றும் 2014-இல் உருவான சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய இரு இளம்மாநிலங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் அமைந்த புதிய தவெக அரசு, சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களைப் பெற்றதால், காங்கிரஸ், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டு கூட்டணி ஆட்சிஅமைத்துள்ளார் விஜய்.

CM Vijay
CM Vijay

இதனால் மஹாராஷ்ட்ரா, பிஹார், ஆந்திரா, ஜார்க்கண்ட், கேரளா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களோடு தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

1952-ல் தமிழகத்தில் தொடங்கிய கூட்டாட்சி முறை!

1952-இல் ராஜாஜி தமிழகத்தில் இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியை அமைத்தார். அதன் பிறகு 74 ஆண்டுகளாக திமுக, அதிமுகவின் ஆதிக்கத்தால் இங்குகூட்டணி அமைச்சரவையே அமையவில்லை. 2006-இல் திமுகவிற்குப் பெரும்பான்மை இல்லாதபோதும் கூட்டணி ஆட்சி அமையவில்லை. தற்போது 2026-இல் அந்த நீண்டகால அரசியல் மரபு உடைக்கப்பட்டுள்ளது. 1967-இல் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் பெரும்பான்மையை இழந்தபோதே இந்தியாவில் கூட்டணி அரசியல் தொடங்கிவிட்டது.

cm vijay
மூன்றாக உடைந்த அதிமுக.. பலம் பெறும் தவெக! வேலுமணி தரப்பின் நிலை என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com