விஜய் வேட்புமனு தாக்கல்
விஜய் வேட்புமனு தாக்கல்Pt web

விஜயிடம் இருக்கும் ஒரே BIKE.. விலை தெரிஞ்சா Shock ஆகிடுவீங்க! சுவாரசிய தகவல்கள் என்ன?

தவெக தலைவர் விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
Published on
Summary

தமிழக அரசியலில் புதிய சக்தியாக எழுந்துள்ள தவெக தலைவர் விஜய், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து, பெரம்பூர், திருச்சி கிழக்கில் தானும் களமிறங்குகிறார். வேட்புமனுவில் அவர் 404 கோடி அசையும் சொத்து, 115 கோடி அசையா சொத்து, பல லக்சுரி கார்கள் வைத்திருப்பதுடன், வெறும் 67,400 ரூபாய் மதிப்புள்ள ஒரே TVS XL Super பைக் மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாடு அரசியல் பெரும்பாலும் திமுக, அதிமுக என இரு துருவ அரசியலாகவே இருந்த நிலையில், தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று, தவெக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் களம் காண்கிறார்.

விஜய்
விஜய்web

இதற்காக பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று தாக்கல் செய்தார். இதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.

விஜய் வேட்புமனு தாக்கல்
விஜய் மீது வழக்குப் பதிவு.. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார்!

அதன்படி த.வெ.க. தலைவர் விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூபாய் 404 கோடி என்றும், விஜய்யின் மனைவி பெயரில் 15 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல தன்னிடம் 115 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் விஜய் கூறியுள்ளார்.

மேலும், தன்னிடம் 2 BMW, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர், மாருதி உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் கூறியுள்ளார். அதே நேரம் தன்னிடம் 67,400 ரூபாய் மதிப்புடைய ஒரே ஒரு TVS XL super பைக்தான் இருப்பதாக அவர் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் வேட்புமனு தாக்கல்
விஜய் வேட்புமனு தாக்கல்Pt web

இது தவிர தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 3.02 கோடியும், தாயார் சோபாவுக்கு 87.12 லட்சமும், மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடியும், மகன் ஜேசனுக்கு 8 லட்சத்து 78 ஆயிரமும், மகள் திவ்யாவுக்கு 4.60 லட்சம் ரூபாயும் கடனாக வழங்கியுள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். இது போக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்திற்கு ரூ.3 கோடி கடன் கொடுத்துள்ளதாகவும் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வேட்புமனு தாக்கல்
தூத்துக்குடி to சென்னைக்கு இனி இரவிலும் ஃபிளைட்.. எம்பி கனிமொழி கொடுத்த செம அப்டேட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com