dog bite
dog biteFB

அலட்சியம் வேண்டவே வேண்டாம்!! உங்களை நாய் கடித்துவிட்டால் உடனே இதையெல்லாம் செய்யுங்கள்..!

தடுப்பூசி போடாமல் இருக்கும் நாய்கள் கடித்தாலோ அல்லது தெரு நாய்கள் கடித்தாலோ, சிறிய கீறல்கள் போன்ற காயங்கள் ஏற்பட்டலோ அது பெரும் பாப்திபை ஏற்படுத்திவிடும்.. உயிரே போகும் அளவிற்கு பிரச்சனைகள் வந்துவிடும்..
Published on

பொதுவாக நாய் என்றால் சிலருக்கு பிடிக்கும்.. சிலருக்கு பிடிக்காது.. அதிலும் சிலர் நாயை பார்த்தாலே பயப்படுவார்கள்.. அதில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதில்லை. அவற்றிற்கு முறையாக தடுபூசிகள் போடப்பட்டிருப்பதினால் அவை கடித்தாலும் பெரிதாக பாதிப்புகள இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி தடுப்பூசி போடாமல் இருக்கும் நாய்கள் கடித்தாலோ அல்லது தெரு நாய்கள் கடித்தாலோ, சிறிய கீறல்கள் போன்ற காயங்கள் ஏற்பட்டலோ அது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.. உயிரே போகும் அளவிற்கு பிரச்சனைகள் வந்துவிடும்..

காரணம் நாய் கடித்தால், ரேபிஸ் போன்ற தீவிர நோய்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உள் காயம், நரம்பு பாதிப்பு, மற்றும் நீண்ட காலத்திற்கு உடல் இயலாமை போன்றவையும் ஏற்படலாம். இதுபோலதான் சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே எட்வின் பிரியா என்ற இளைஞர் நாய் கடித்து இறந்தார். அவரை போலவே புனேயில் கபடி வீரர் பிரிஜேஷ் சோலங்கி ரேபிஸ் நோயாஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

dog bite
கிருஷ்ணகிரி | நாய் கடித்ததை கண்டுகொள்ளாமல் இருந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்

இதற்கு காராணம் ரேபிஸை அறிகுறிகள் தோன்றியவுடன் குணப்படுத்த முடியாது. இதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் பொதுவானவை மற்றும் காய்ச்சல், வலி ​​அல்லது காயத்தைச் சுற்றி கூச்ச உணர்வு, குத்துதல் அல்லது எரிதல் போன்றஅசாதாரண உணர்வுகளாக இருக்கும்.. மேலும் இந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தை அடையும்போது, ​​அது மூளை மற்றும் முதுகுத் தண்டில் கடுமையான மற்றும் இறுதியில் ஆபத்தான வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி இந்த பாதிப்புகளில் இருந்து வெளிவர முடியுமா? அப்படி நாய் கடித்து ராபிஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? ராபிஸ் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? நாயை வளர்ப்பவர்கள் அதனை எவ்வாறு பராமரிக்க வேண்டும்? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

dog bite
dog biteFB
dog bite
“திடீரென்று இப்படி.. எதிர்பார்க்கவே இல்ல.. எங்களுக்கு கஷ்டம்தான்”- மறைந்த டெல்லி கணேஷின் மகன் வேதனை!

நாய் கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

நாய் கடித்தால் ரேபிஸ் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு தீவிர நோய். சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் மரணம் ஏற்படலாம். அத்துடன் நாயின் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் காயம் வழியாக உடலுக்குள் சென்று தொற்றுநோயை ஏற்படுத்தலாம். இதனால், வலி, வீக்கம் மற்றும் சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் நாய் கடித்தால், தோலின் அடியில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகள் சேதமடையலாம்.

சில நேரங்களில், நாய் கடியானது நீண்ட கால உடல் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக, நரம்பு பாதிப்பு, கை அல்லது கால்களில் உணர்வின்மை அல்லது இயக்க குறைபாடுகள் ஏற்படலாம். அத்துடன் நாய் கடியானது மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்..

dog bite
'ஆவாஸ் அன்ஜிங்..' தமிழ்நாடு முழுவதும் இத்தனை நாய்க்கடி சம்பவங்களா? அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

ரேபிஸ் என்றால் என்ன?

ரேபிஸ் என்பது வெறிநாய்க்கடி நோய் அல்லது வெறிநோய் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இது ஒரு வைரஸ் நோயாகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பொதுவாக கடித்தல் மூலம் பரவும் இந்த நோய், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால், ரேபிஸ் பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்துகிறது..

vaccinating dog
vaccinating dogFB

ரேபிஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

ரேபிஸ் நோய் ஏற்பட்டால், தொடக்கத்தில் காய்ச்சல், தலைவலி, பலவீனம் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படும். பின்னர், இது தீவிரமடைந்து ஆக்ரோஷம், வலிப்பு, குழப்பம் போன்ற நரம்பியல் அறிகுறிகளாக மாறலாம். சிலருக்கு முடக்குவாத ரேபிஸ் ஏற்பட்டு உடல் பலவீனம் மற்றும் பக்கவாதம் ஏற்படலாம்.

பொதுவான அறிகுறிகள்

காய்ச்சல், தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, விழுங்குவதில் சிரமம், அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.

ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தோன்றுவதற்கு சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை ஆகலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

dog bite
பிரேசிலுக்கு 50% இறக்குமதி வரி.. சர்ச்சையாகும் ட்ரம்ப்பின் காரணம்..!

கால்நடை மருத்துவர் சொல்வது என்ன?

மேலும் இது குறித்து கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம் கூறுகையில், பொதுவாகவே ராபிஸ் வந்துச்சுனா மரணம்தான். அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஒருவிதமான வைரஸ் ஆகும்.. இந்த வைரஸ் நாய்களுக்கும் வரலாம். மனிதர்களுக்கும் வரலாம். பெரும்பாலும் நாய் கடிப்பதினால் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி நாய் கடித்து உடனேயே சிகிச்சை செய்யவில்லை என்றால் ராப்டோவிரிடே, லைசாவைரஸ், (rhabdoviridae, lyssavirus) போன்ற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைரஸ்கள் உடலில் தோன்றி உயிரையே எடுத்துவிடும்.. இதற்கு மருந்துகள் இல்லை ..ஆனால் வராமல் தடுக்க மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான தடுப்பூசிகள் போடலாம்.. அதனால் இந்த நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார், மருத்துவர்..

மேலும் எல்லா நாய்களுக்கும் ராபிஸ் நோய் இருக்கும் என நினைப்பது தவறு.. ராபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நாயிடம் இருந்து மட்டுமே அது பரவ வாய்ப்புள்ளது என்றும் அது எல்லா நாய்களுக்கும் வராது என்றும் கூறுகிறார்..

தெரு நாய்களுக்கு சரியான தடுப்பூசி போடாமல் இருப்பதினால் அது ராபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என பார்த்தவுடனேயே தெரியாது.. ஆனால் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசி போட்டிருப்போம் அதனால் பயப்பட தேவையில்லை என்கிறார் மருத்துவர்.. மேலும் இந்த ராபிஸால் பாதிக்கப்பட்ட நாய்கள் ஒரு இடத்திலே இருக்காது என்றும் அது எல்லா தெருக்களுக்கும் ஓடிக்கொண்டே இருக்கும் அதனால் மற்ற நாய்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என்றும் மருத்துவர் கூறுகிறார்..

dog bite
அப்படியா!!! கடலுக்குள் மூழ்கும் விமான நிலையம்.. என்ன செய்யப்போகிறது ஜப்பான் அரசு?
dog
dogFB

சென்னை மாநகரட்சி தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து 10 நாள் குவரண்டைனில் வைத்து சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.. இதனால் அந்த 10 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டிருந்த நாய்கள் இறந்துவிடும்.. மற்ற ஆரோக்கியமான நாய் நன்றாக இருக்கும். இதனால் ராபிஸ் இல்லாத சென்னையை உருவாக்க முடியும் என்கிறார்..

சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி, டாகர். கமல் ஹூசைன் இது குறித்து கூறுகையில், புளியந்தோப்பு, கணவாய் காலனி, லாயர்ஸ் பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்க நல்லூர் ஆகிய 5 இடங்களில் தெருநாய்களின் எண்ணிகையை கட்டுப்படுத்த கருதடை மையங்கள் இயங்கி வருகின்றன, இந்த மையங்களில் ஆண்டு தோறும் தோராயமாக 15000 முதல் 18000 வரையிலான நாய்களுக்கு கருதடை செய்யப்படுகிறது என்றார்..

அத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டு 19640 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு அதில்14885 நாய்களுக்கும், 2024 ஆம் ஆண்டு 20296 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு 14678 தெரு நாய்களுக்கு கருதடை செய்யப்பட்டது.. அதுபோலவே இந்த வருடமும் ( 2025) 8104 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு 7657 நாய்களுக்கு கருதடை செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தெரு நாய்களை பிடிப்பதற்கு என்றே தனி மையங்களும் ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.. தற்போது சென்னையில் 23 நாய் பிடிக்கும் வாகனமும் ஒரு வாகனத்திற்கு 5 பயிற்சி பெற்ற பணியாளார்களும் நியாயமிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் நாய் சம்பந்தமாக புகார் கொடுக்க எண் - 1913 க்கு டைய செய்யலாம்.. , புகார் அளிக்க வேண்டுய இளையதள முகவரி https//erp.chennaicorporation.gov.in

மேலும் நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் அருணச்சலம் கூறுகையில், நாய் கடித்தாலோ அல்லது கீறினாலோ அந்த இடத்தை உடனடியாக சோப்பு மற்றும் நீரால் நன்கு கழுவ வேண்டும். கட்டாயம் 10 முதல் 15 முறையாவது கழுவ வேண்டும். காயம் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகுவது அவசியம். அத்துடன் உடனேயே ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். தமிநாடு அரசு 4 தடுப்பூசிகளை போட பரிந்துரைக்கிறது. கட்டாயமாக இந்த 4 முறை தடுபூசிகளை போட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் பதட்டமாக இருந்தால், அவரை அமைதிப்படுத்த வேண்டும். அதன் பிறகு மிக முக்கியமான விஷயம் காயத்தை சுத்தமான துணியால் மூடி வைத்து மருத்துவர் சொல்லும் ஆலோசனைகளை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் நாய் கடிக்கு எந்தவிதமான பத்தியமும் கிடையாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com