trump
trumppt web

பிரேசிலுக்கு 50% இறக்குமதி வரி.. சர்ச்சையாகும் ட்ரம்ப்பின் காரணம்..!

ஒருநாட்டிற்கு எதிரான வரிவிதிப்பு குறித்து தெரிவிக்கப்படும் காரணங்களுக்கு அர்த்தங்கள் இருந்து வந்த நிலையில், பிரேசில் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிக்கு கூறப்படும் காரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ஒருநாட்டிற்கு எதிரான வரிவிதிப்பு குறித்து தெரிவிக்கப்படும் காரணங்களுக்கு அர்த்தங்கள் இருந்து வந்த நிலையில், பிரேசில் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிக்கு கூறப்படும் காரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

trump
சுவரில் ரத்தக் கறை.. மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை செய்த பள்ளி நிர்வாகம்! | Maharashtra

பிரேசில் நாட்டுக்கு 50% இறக்குமதி வரி விதித்ததற்கு ட்ரம்ப் கூறிய காரணம் சர்ச்சையாகியுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு 25 முதல் 40% வரை இறக்குமதி வரி விதித்த ட்ரம்ப் பிரேசிலுக்கு மட்டும் 50% வரி விதித்துள்ளார். பிரேசில் முன்னாள் அதிபர் போல்சனாரோ (BOLSANARO) வை அந்நாடு நடத்தும் விதத்தை கண்டித்துள்ள ட்ரம்ப் அதற்காகவே அதிக வரி விதித்தாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. எதிர்ப்பவர்களை வேட்டையாடும் போக்கை பிரேசில் நிறுத்தவேண்டும் என அந்நாட்டு அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ட்ரம்ப் கூறியுள்ளார்.

லூலா டி சில்வா
லூலா டி சில்வா

ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரேசில் அதிபர் லுலா டி சில்வா எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லத்தேவையில்லை என்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதீர்கள் என்றும் கூறியுள்ளார். ட்ரம்ப்பை பிரேசில் அதிபர் லுலா டிசில்வா வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார். மேலும் சீனாவுடன் பிரேசில் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறது. உண்மையான வணிக ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளை விட தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நாடுகள் மீது ட்ரம்ப் நடவடிக்கை எடுப்பதாக இது பார்க்கப்படுகிறது

trump
உ.பி. | ”மகளுக்கு இன்சுலின் போட பணம் இல்லை” - வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்த தொழிலதிபர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com