”தவெக ஆட்சியை கவிழ்க்க IAS அதிகாரிகள் முயற்சி..” - வைகோ
வைகோ, தனது நூல் வெளியீட்டு விழாவில், சில ஐஏஎஸ் அதிகாரிகள் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார். மாமூல் வராததால் இச்சதி நடக்கிறது என்றும், அவர்களின் பெயர்களை வெளியிட முடியும் என தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைகோ இன் பார்லிமெண்ட் என்ற நூல் மறுவெளியிட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கவிக்கடல் கண்ணதாசன் எனும் தலைப்பில் வைகோ சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய வைகோ, வைகோ இன் பார்லிமெண்ட் ஆங்கில பிரதி வெளியீட்டு விழாவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அழைத்தேன். என்னை விட்டுவிடுங்கள் என்னால் அங்கு வந்து பேச முடியாது என விஜய் சொல்லிவிட்டார். வைகோ இன் பார்லிமெண்ட் தமிழ் பிரதி வெளியிட்டுக்காவது வருவீர்களா என விஜய் அவர்களிடம் கேட்டேன். நிச்சயம் வருகிறேன் என சொன்னார். இதையெல்லாம் அமைச்சர் ராஜ்மோகன் விஜய் அவர்களிடம் சொல்வார் என நம்புகிறேன். விஜய் அவர்களிடம் நான் அடிக்கடி பேசுவது இல்லை. முக்கியமான விஷயங்கள் மட்டும் தான் பேசுவேன். என் தனிப்பட்ட விஷயத்துக்காக எந்த அமைச்சரிடமும் நான் இதுவரை எதையும் கேட்டது கிடையாது என பேசினார்.
மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் தவெக ஆட்சியை கவிழ்க்க சதிசெய்வதாக பேசிய அவர், “TVK ஆட்சி அமைந்ததும் நமக்கு வழக்கமாக வந்துகொண்டிருந்த மாமூல் வராததால், சில IAS அதிகாரிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் பெயர் கூட என்னால் சொல்ல முடியும்” என பேசியுள்ளார்.

