12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைpt web

கனமழை எச்சரிக்கை | 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - சென்னைக்கு உண்டா?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Published on

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடிய விடிய பெய்து வரும் கனமழை
விடிய விடிய பெய்து வரும் கனமழைpt desk

அரியலூர், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், விழுப்புரம், கடலூர், திருச்சி, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், மதுரை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
Top 10 Sports | உலக சாம்பியனை வீழ்த்துவாரா குகேஷ்? To உலக சாதனை படைத்த மும்பை அணி!

இந்நிலையில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலானதொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
பெங்களூரை உலுக்கிய மரணம்.. யார் இந்த அதுல் சுபாஷ்? மனைவி மீது சுமத்திய பகீர் குற்றச்சாட்டுகள் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com