கனமழை எச்சரிக்கை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள சூழலில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் கணித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்.