\
First-Time MLAs to Get Cars, Aides Under Vijay Government
ஜோதிமணிPt web

விசிக ஜோதிமணி கோரிக்கை.. முதல்முறை எம்.எல்.ஏக்களுக்கு கார், உதவியாளர்?

முதல்முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர்கள் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழ்நாடு பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையின் முதல்நாளில் பொது பட்ஜெட்டும், இரண்டாவது நாளான ஆகஸ்ட் 6-ம் தேதி வேளண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதி பேசிய விசிக காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. ஜோதிமணி, 280 கி.மீ தொலைவில் இருந்து தான் சட்டப்பேரவைக்கு வருவதாகவும், தன்னிடம் வாகன வசதி இல்லை என தெரிவித்தார். மேலும், உதவியாளரை வைத்து ஊதியம் கொடுக்கும் அளவுக்கு பணம் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஜோதிமணி
ஜோதிமணிX

தொடர்ந்து பேசிய அவர், காலணி அணியாத எம்.எல்.ஏ-க்கள் கூட இருப்பதாகவும், ஊழல் இல்லாத அரசு அமையவும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவிடும் வகையிலும் வாகன வசதி செய்து தர வேண்டும் என முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அப்போது பேசிய சபாநாயகர் ஜேடிசி பிரபாகர், முதல்வரின் கரங்கள் அள்ளிக் கொடுக்கும் கரங்கள் எனப் புகாரம் தெரிவித்ததுடன், முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இந்தச்சூழலில் தான், முதல்முறை எம்.எல்.ஏ-க்களுக்கு கார் மற்றும் உதவியாளர்கள் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

First-Time MLAs to Get Cars, Aides Under Vijay Government
புனித ஜார்ஜ் கோட்டை | தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்.. புதிய அறிவிப்புகள் வெளியீடு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com