மலைக்கோயிலுக்கு சென்று இரு குழந்தைகளையும் கொன்ற தந்தை... திருமண நாளில் விபரீத முடிவு

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி, குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு தானும் குடித்த நிலையில், இரு பிஞ்சு குழந்தைகள் பலியான சோகம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
உயிரிழந்த குழந்தைகள்
உயிரிழந்த குழந்தைகள்pt

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கடலரசு. 30 வயதுடைய இவர் ஸ்டுடியோ மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு ஜனனி 27 என்ற மனைவியும், சிவன்ராஜ் (4), நிவந்திகா(2) என்ற குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே் அடிக்கடி கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜனனி, தர்மபுரி இலக்கியம்பட்டியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜனனியின் அம்மா, ஜனனி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து கடலரசுவிடம் சமாதானம் பேசி வீட்டில் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. மீண்டும் இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது ஆண்டு திருமண நாளான இன்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரியமலை தீர்த்தத்திற்கு சென்று குளித்து சாமி தரிசனம் செய்து விட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றுள்ளார் கடலரசு.

உயிரிழந்த குழந்தைகள்
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை தேர்தல் முடிவுகள்... ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?

அங்கு பெரியமலை மீது சிறிது தூரம் செல்லலாம் எனக் கூறிய நிலையில், ஜனனி திருமண நாள் என்பதால் தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்தநிலையில் கடலரசு தான் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து மனைவிக்கு ஊற்றிய நிலையில், சுதாரித்துக்கொண்ட ஜனனி தப்பி ஓடி வந்து பெரியமலை அடிவாரத்தில் உள்ளவர்களிடம் தகவலை தெரிவித்துள்ளர். இதற்கிடையில் கடலரசு, தனது இரு குழந்தைகளுக்கும் பூச்சி மருந்தை ஊற்றியதுடன், தானும் குடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் பலியான நிலையில் கடலரசு மயங்கிய நிலையில் இருந்தார்.

தகவல் அறிந்து வந்த நாகரசம்பட்டி போலீசார் ஜனனியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைவக்கும், கடலரசுவை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட இரு குழந்தைகளின் உடலை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இச்சம்பவம் நாகரசம்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com