\
போலி மருத்துவர் கார்த்திகேயன்
போலி மருத்துவர் கார்த்திகேயன் PT WEP

சித்த மருத்துவர் என சொல்லி ஊசி‌போட்ட போலி மருத்துவர்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கடலூரில் சித்த மருத்துவம் எனக் கூறிவிட்டு ஊசி போட்ட போலி மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள பாசிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அரியலூர் மாவட்டம் குளத்தூர் பகுதியில் சித்த மருத்துவரென்ற பெயரில் கடை நடத்துவதாகக் கூறி ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்தி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கலைச்செல்வன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.

போலி மருத்துவர் கார்த்திகேயன்
குடிநீர் பாட்டிலில் நீந்திய தவளை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி - அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள்!

மேலும் இவர் மீது உளுந்தூர்பேட்டை, மீன்சுருட்டி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்துள்ளனர். மேற்கொண்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலி மருத்துவர் கார்த்திகேயன்
ஈரோடு : மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் நடத்திய தந்தை; அதிர்ச்சி காட்சிகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com