குடிநீர் பாட்டிலில் நீந்திய தவளை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி - அதிரடி சோதனையில் இறங்கிய அதிகாரிகள்!

மயிலாடுதுறையில் குடிநீர் பாட்டிலில் தவளை கிடந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
குடிநீர் பாட்டில் மற்றும் தவளை
குடிநீர் பாட்டில் மற்றும் தவளை PT WEP

மயிலாடுதுறை நகராட்சி தருமபுரம் சாலையில் கிருஷ்ணா என்ற பெயரில் குடிநீர் சுத்திகரித்து விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 7 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பாட்டில்கள் முதல் 40 ரூபாய் மதிப்பிலான பெரிய கேன்கள் வரை குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் மட்டும் இல்லாமல், வெளி மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனத்தில் இருந்து கச்சேரி சாலையில் உள்ள மளிகைக் கடை ஒன்றுக்கு விற்பனைக்கு சென்ற வாட்டர் கேனில் உயிருடன் தவளை இருந்ததுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறையினருக்குப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுப்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

 வாட்டர் கேனில் மிதித்த தவளை
வாட்டர் கேனில் மிதித்த தவளை

இந்த ஆய்வில் வாட்டர் கேனில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காலாவதியான தேதி குறிப்பிடாமல் உள்ள வாட்டர் கேனை வாங்கி விற்பனை செய்யக்கூடாது என மளிகைக் கடைக்காரரை உணவுப்பாதுகாப்புத்துறைய அதிகாரிகள் எச்சரித்தனர்.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

இதனைத்தொடர்ந்து கிருஷ்ணா வாட்டர் கேன் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மினி லாரியில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாட்டர் கேன்களில் தண்ணீர் நிரப்பப்பட்ட தேதி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

குடிநீர் பாட்டில் மற்றும் தவளை
ஓசூர் - முன்விரோதத்தில் 2 இளைஞர்கள் கொலை: தலையை துண்டித்து தெருவில் வீசிய கொடூரம்!

மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் தவளை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தண்ணீர் நிரப்பப்படாத வாட்டர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து தவளை உள்ளே நுழைந்து இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாட்டர் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அங்குத் தவளைகள், நத்தை, மரவட்டை என பல உயிரினங்கள் இருந்ததுள்ளன. பின்னர் உடனடியாக அந்த நிறுவனத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுப்புராஜ் உத்தரவிட்டார்.

 வாட்டர் கேன்கள்
வாட்டர் கேன்கள்

இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டும், அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உற்பத்தி செய்யப்பட்ட தேதி மற்றும் காலாவதியான தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வரும் எந்த பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யக்கூடாது என்றும், காலாவதியாகும் தேதியைப் பார்த்து நுகர்வோர்கள் பொருட்களை வாங்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் தவளை உயிருடன் இருந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் பாட்டில் மற்றும் தவளை
ஈரோடு : மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் நடத்திய தந்தை; அதிர்ச்சி காட்சிகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com