ஈரோடு : மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் நடத்திய தந்தை; அதிர்ச்சி காட்சிகள்!

ஈரோடு அருகே மகள் மற்றும் மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் சிசிடிவி காட்சிகள்
மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் சிசிடிவி காட்சிகள்PT WEP

ஈரோடு மாவட்டம் சுண்ணாம்பு ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கருப்பண்ணசாமி தோல் தொழில் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கருப்பண்ணசாமி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் இவருடைய மூத்த மகள் மயூரி என்பவர் சையத் இப்ராஹிம் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு சையத் இப்ராஹிம் வீட்டிலும், மயூரியின் தாய் அனிதா சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கருப்பண்ணசாமியின் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது. இதற்கிடையில் சொத்து பிரச்னை தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் கருப்பண்ணசாமி. தொடர்ந்து மனைவிக்கு பல பிரச்னைகள் கொடுத்துவந்த அவர், வரும் 22ம் தேதி விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது எனக் கூறி அனிதா மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் சிசிடிவி காட்சிகள்
தஞ்சை: 5 ஆண்டுகளாக பெண்ணில் வயிற்றில் இருந்த அலுமினியம் மூடி.. கர்ப்பப்பை சிகிச்சையில் குளறுபடியா?

மேலும் மயூரி, தனது தாய் அனிதா மற்றும் தங்கையுடன் வசித்து வரும் வீட்டை தன் பெயருக்கு மாற்றித்தர கேட்டு கருப்பண்ணசாமி அவர் உறவினர்களுடன் சேர்ந்து கட்டை மற்றும் இரும்பு பைப்புகளால் அவர்கள் மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசாரிடம் புகாரளித்துள்ள மயூரி, கருப்பண்ணசாமி மற்றும் அவரின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

இதற்கிடையில் மயூரி உள்பட சிலர் தங்களை தாக்கியதாக மயூரியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் மயூரி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயூரியின் தந்தை அதிமுகவைச் சேர்ந்தவர் என்பதால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே கருப்பண்ணசாமி தனது உறவினர்களுடன் வந்து மனைவி மற்றும் மகளைத் தாக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மனைவி மற்றும் மகள் மீது நடுரோட்டில் தாக்குதல் சிசிடிவி காட்சிகள்
ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பியதன் காரணம் என்ன? கிராம மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com