கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக.. யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள்?
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா - ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவுக்கு - 27 தொகுதிகளும், பாமகவுக்கு - 18 தொகுதிகளும், அமமுகவுக்கு - 11 தொகுதிகளும், த.மா.காவுக்கு 5 இடங்களும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடங்களும், ஜான் பாண்டியன் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்தும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
அதன்படி, மைலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி, திருப்பூர், கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்க்ஜு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் ஆகிய இடங்கள் பாஜவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் அமமுகவுக்கு பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அன்புமணியின் பாமவுக்கு, சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேலூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமாகாவுக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜான் பாண்டியனின் தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் புரட்சிப் பாரதம் கட்சிக்கு கீழ்வைத்தியனாங்குப்பம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக 169 இடங்களில் போட்டியிடுகிறது. முன்னதாக, அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

